கல்வி மாவட்ட வாரியாக காலியாக இருந்த 29 பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் மாவட்ட கல்வி அதிகாரிகள் (டிஇஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு உயர் நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு நிகரான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விழுப்புரம் மாவட்ட சித்தாமல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிங்கராஜ், சென்னை பள்ளிக் கல்வி இயக்கக உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மாங்காடு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, சென்னையிலும், மணலி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் திருப்பூரிலும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, காஞ்சிபுரம் மாவட்ட செங்காடு தலைமை ஆசிரியர் சாந்தகுமார் கோயமுத்தூர் மாநகராட்சி கல்வி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் மொத்தம் 29 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment