பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் முதன்மை விடைத்தாளுடன் முகப்புத் தாளை இம்மாதம் 11ஆம் தேதி முதல் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் இணைக்க வேண்டும் என அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 8,510 மாணவ,மாணவியர், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 66 மேல்நிலைப் பள்ளிகளில் 7,902 மாணவ, மாணவியர், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் 60 மேல்நிலைப் பள்ளிகளில் 7,728 மாணவ,மாணவியர் என மொத்தம் 24,140 பேர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில், கல்வி மாவட்டத்தில் அமைக் கப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு மொழிப்பாடங்களுக்கான முகப்புத்தாள் கட்டுகள் வெள்ளிக்கிழமை (பிப்.5) முதல் அனுப்பப்பட உள்ளன. இவற்றை முதன்மை கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களின் தலைமை ஆசிரியர்களிடம் இம்மாதம் 8 முதல் 11ஆம் தேதிக்குள் ஒப்ப டைக்க வேண்டும்.
இம்மாதம் 11ஆம் தேதி முதல் முகப்புத் தாளை முதன்மை விடைத்தாளுடன் இணைக்கும் பணியில் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment