'சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.
* மூளை மின் அதிர்வு அலை பரிசோதகர் - 12; காது செவித்திறன் பரிசோதகர் - 17; செயற்கை உறுப்பு தயாரிப்பு உதவியாளர் - 64; தொழில்முறை பயிற்சியாளர் - 18 இடங்களுக்கு, பிப்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
* இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் - 524; மருந்தாளுனர் - 333; எக்ஸ் - ரே இருட்டறை உதவியாளர் - 234 இடங்களுக்கு, பிப்., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும், விவரங்களுக்கு, www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு எம்.ஆர்.பி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment