தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமைச்செயலாளராக இருந்த ஞானதேசிகன் மாற்றப்பட்டு, முதல்வர் தனிப்பிரவு செயலாளராக இருந்த பி.ராமமோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பிரதீப் யாதவ்- கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ககன் தீப் சிங் பேடி- விவசாய உற்பத்தி ஆணையர், அரசு செயலர். கால்நடை பராமரிப்பு, பால் மீன்வளத்துறை செயலாளர் கூடுதல் பொறுப்பு.
ஹன்ஸ்ராஜ் வர்மா- ஊரக வளர்ச்சி பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதுல்யா மிஸ்ரா- சுற்றுச்சூழல் வனத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment