தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிந்து, ஓராண்டு ஆகியும், இன்று வரை அதற்கான முடிவுகள் வராததால் தேர்வு எழுதியவர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.தமிழக பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, 1983 வரை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை அடிப்படையில், வேலை வழங்கப்பட்டது. 2015ல், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, 10ம் வகுப்பு வெற்றி பெற்றவர்கள், இதற்கான தேர்வெழுதி வெற்றி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கடந்தாண்டு மே, 31ல் நடந்த தேர்வில், 4,362 பணியிடங்களுக்கு, எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதினர். ஒரு மாதத்தில் முடிவுகள் வெளியாகும் என கூறப்
பட்டது. தற்போது, ஓராண்டு கடந்தும் இன்று வரை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வெழுதியவர்கள் விரக்தியில் உள்ளனர்.
No comments:
Post a Comment