அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தரப்படுகின்றன. அரசின் நிதியில், ஆசிரியர்களுக்கான சம்பளமும் தரப்படுகிறது.ஆனால், சில, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நன்கொடை மற்றும் பலவித கட்டணங்கள் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு, ரசீதும் தருவதில்லை.
குறிப்பாக, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த வசூல் வேட்டை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், நேற்று செய்தி வெளியானதும், பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.
திடீர் ஆய்வு நடத்தவும், புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனினும், இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலகம் மற்றும் இயக்குனர் அலுவலத்தில் இருந்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்
படவில்லை
No comments:
Post a Comment