அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பஸ் பாஸ் கிடைக்க, இன்னும் இரு வாரங்களாகும் என, தெரிகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும், கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.
இந்த அட்டைகளை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே குழு அமைத்து, போக்குவரத்து துறை மூலம், மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க காலதாமதமாகிறது. ஜூனில் பள்ளி திறந்த பின்னே, மாணவர்களின் பெயர் விவரங்களை, போக்குவரத்து துறைக்கு வழங்குகின்றனர்.
இந்த நடைமுறைக்கு, ஒரு மாத காலம் ஆவதால், பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாமல், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டும், நேற்று பள்ளி திறந்த நிலையில், பஸ் பாஸ் வழங்க தேவையான தகவல்களை, மாணவர்களிடம் ஆசிரியர்கள் பெறவில்லை. இதுகுறித்து, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஜூன் 10ம் தேதிக்குள், மாணவர்களின் விவரங்களை சேகரித்து, போக்குவரத்து துறை அதிகாரி
களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், பள்ளிகளில் இந்த பணி துவங்கப்படவில்லை.
ஒரு வாரத்திற்கு பின்னே, இப்பணிகள் துவங்கும் என்பதால், மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க, எப்படியும் ஒரு மாதமாகி விடும். அதுவரை, இந்த மாணவர்களால், பஸ்களில் சென்று வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை உள்ளது. பாஸ் இல்லை என்றால், நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை. அதனால், மாணவர்களும் பஸ்சில் ஏறவே பயப்படுகின்றனர்.
எனவே, பஸ் பாஸ் வழங்கும் போதே, அதன் கால வரம்பை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து
வழங்கலாம். கோடை விடுமுறையான, மே மாதத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கலாம்.
No comments:
Post a Comment