போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு,மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து,அரியலுார் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.அரியலுாரை சேர்ந்தவர் தனபால் மனைவி ராஜாமணி, 36.இவர், 2000ம் ஆண்டு,மணக்கால் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.
பின்,அரியலுார்ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் துரை,ராஜாமணியின் கல்விசான்றிதழை சரிபார்த்த போது,அவைபோலியானது என்று தெரியவந்தது.
இதுகுறித்து,அவர் அரியலுார் போலீசில் கொடுத்த புகாரின்படி,போலீசார் வழக்கு பதிந்து,அரியலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி,நேற்று தீர்ப்பளித்தார்.அதில்,போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததற்காக,ராஜாமணிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டணை விதித்துதீர்ப்பளித்தார். பின்,ராஜாமணி ஜாமினில் விடுதலையானார்.
No comments:
Post a Comment