Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 9, 2016

    பிளஸ் 2 துணைத்தேர்வு 'தத்கல்' விண்ணப்பம்

    பிளஸ் 2 சிறப்பு துணைதேர்வுக்கு நாளையும், நாளை மறுநாளும், 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து, 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அவர்கள், கடந்த மார்ச்சில் நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வராகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.


    ஏற்கனவே எழுதிய தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு விண்ணப்பித்தும் வருகை புரியாத, அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில், தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். 'தத்கல்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தேர்வர்கள், சென்னையில் மட்டுமே தேர்வெழுத இயலும்.

    இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், நாளை மற்றும் நாளை மறுநாள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.

    அப்போது, தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலையும், தேர்வெழுதாதவர்கள் தங்கள், 'ஹால் டிக்கெட்'டையும், பதிவு செய்யும் அலுவலரிடம் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அதற்கு உரிய கட்டணமும் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: