வேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு, தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் மகளிர்க்கென இயங்கிவரும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர்க்கு கணினி இயக்குபவர், திட்ட உதவியாளர், டிடிபி ஆபரேட்டர் ஆகிய இரு தொழில் பிரிவுகளில் ஓர் ஆண்டு காலம் பயிற்சியளிக்கப்படுகிறது.
பயிற்சி காலத்தில் மாதம் ரூ.500 உதவித்தொகை, விலையில்லா மடிக் கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், சீருடை, காலணி, கட்டணமில்லா பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். ஓர் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த பின்னர் மத்திய அரசால் தேர்வு நடத்தி தேசிய தொழில் சான்று வழங்கப்படும்.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் தனியார் தொழில் பயிற்சி நிலையங்களில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருத்துநர், மின்சாரப் பணியாளர், குழாய் பொருத்துநர் போன்ற தொழில் பிரிவுகளிலும், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கம்பியாள் தொழில் பிரிவிலும் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
இவ் வாய்ப்பை பயன்படுத்தி தொழில் பயிற்சி பெற விரும்புபவர்கள் இணைதளம் மூலமாக வரும் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04286 267976 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment