பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்வதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 1.84 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி, விண்ணப்பித்துள்ளனர். சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், நேற்றுடன் முடிந்தது. இரண்டு லட்சத்து, 52 ஆயிரத்து, 781 பேர் விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர். இதில், ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 530 பேர் அதற்கான கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, நகல் எடுத்து, உரிய ஆவணங்களுடன், நேரிலோ அல்லது தபால் வழியாகவோ, ஜூன், 4 மாலை, 6:00 மணிக்குள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்க வேண்டும். நேற்று மாலை வரை, 81 ஆயிரத்து, 100 விண்ணப்பங்கள், பல்கலைக்கு வந்து சேர்ந்துள்ளன.
No comments:
Post a Comment