சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் இன்று 3-வது நாளாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் சேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் ஆசிரியர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் இந்த மாநிலம் தழுவிய போராட்டத்தால் இன்றும் தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வெறிச்சோடின. தமிழகம் முழுவதும் 70 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பள்ளிகள் முடங்கியுள்ளன.இதனால் மாணவர்களும் பள்ளிக்கு செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனையடுத்து பெரும்பாலான பள்ளிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. ஒரு சில பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துகின்றனர்.
No comments:
Post a Comment