மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை பட்டியல் தயாரித்துள்ளது.மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) 3 நாள் போராட்டத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் கடந்த சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடத்தியது.
கடலூர் மாவட்டத்தில் 1,424 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 5,045 ஆசிரியர்களில் 1,270 பேரும், 282 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் 5,098 ஆசிரியர்களில் 1,048 பேரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 300 பேர் மட்டுமே கைதாகினர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த பட்டியலை மாவட்டக் கல்வித்துறை தயாரித்துள்ளது.
போராட்ட நாள்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளித்து பணிக்கு வரவில்லையெனில், விடுப்பு குறிப்பிடப்பட்டதற்கான காரணம் சரியாக உள்ளதா என ஆராய்ந்து இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், 1,500 ஆசிரியர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாம். இவர்களுக்கு ஒரு நாள் முதல் 3 நாள்கள் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடமிருந்து இதற்கான உத்தரவு வரப்பெற்ற பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment