மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறியதாவது: பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்., 8 முதல் 20ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 186 மையங்களில் 37 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு மையங்கள் ஏ மற்றும் பி என இரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஆசிரியர்கள் மற்றொரு மண்டல தேர்வு மைய கண்காணிப்பாளராக இருப்பார். ஆய்வகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, என்றார்.
No comments:
Post a Comment