தமிழக வருவாய் துறையில், கிராம உதவியாளர் முதல் தாசில்தார் வரையில், 10,535 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடத்தால் இரண்டு, மூன்று பணியிடங்களை, ஒருவர் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில், காலிப்பணியிடங்கள் ஏராளம் உள்ளன.
தற்போது, வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விவரம்:
பதவி மொத்த பணியிடம் காலியிடம்
தாசில்தார் 1,640 148
துணை தாசில்தார் 2,086 619
வருவாய் உதவியாளர் 6,840 1,489
இளநிலை உதவியாளர் 3,011 1,073
தட்டச்சர் 1,214 511
சுருக்கெழுத்தர் 133 45
அலுவலக உதவியாளர் 3,219 1,346
இரவுக்காவலர் 558 283
ஓட்டுனர்கள் 914 183
பதிவறை எழுத்தர் 805 299
துப்புரவாளர் 406 62
டெலிபோன் ஆபரேட்டர் 42 14
கிராம நிர்வாக அலுவலர் 13,100 3817
கிராம உதவியாளர் 16,888 546
No comments:
Post a Comment