ஆசிரியர்
பணி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அரசு கல்லூரியில் பயின்ற
பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசுப்பள்ளி
ஆசிரியர் பணி தேர்வுக்கு, ஏற்கனவே
கடைப்பிடித்து வந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண்
கணக்கிடும் முறையை சென்னை ஐகோர்ட்
சமீபத்தில் ரத்து செய்தது. இந்நிலையில்,
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,)
தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு, சான்றிதழ்
சரிபார்க்கும் பணி, நேற்று துவங்கியது.
10ம் வகுப்பு, பிளஸ் 2, இளங்கலை, பி.எட்., சான்றுகள்
அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் இளங்கலை
முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி.,
என்.எஸ்.எஸ்., வாழ்க்கைக்கல்வி
ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றிக்கான மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்து கொள்வதால் குளறுபடி
ஏற்பட்டுள்ளது. அந்த பாடங்களுக்கு 90 முதல்
100 சதவீதம் வரை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றை சேர்த்து கணக்கிடுவதால், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அதிகரிக்கிறது. ஆனால், அரசு மற்றும்
உதவிபெறும் பல்கலை, கல்லூரிகளில் இளங்கலை
முடித்தவர்களின் சான்றிதழ்களில் என்.சி.சி.,
என்.எஸ்.எஸ்., குறித்த
விபரங்கள் இல்லை. இதனால், அரசுக்
கல்லூரியில் பயின்றவர்களுக்கு மதிப்பெண் குறைந்துள்ளது. அரசுக் கல்லூரி பட்டதாரிகள்
கூறுகையில், 'என்.சி.சி.,
என்.எஸ்.எஸ்., வாழ்க்கை
கல்வி மதிப்பெண்களை சேர்த்து கணக்கிடுவதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறையை
ரத்து செய்ய வேண்டும்' என்றனர்.
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'டி.ஆர்.பி., உத்தரவுப்படி
தான், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுகிறோம்' என்றார்.
16 comments:
calculate weightage with LKG UKG marks ,10 & +2 revision test marks also then only Tamilnadu government will get well qualified teachers.
Don't joke,this is life
I didnt joke government is joking all of us.Government wants to test our todays and future performance only not from our childhood.Many of us got just pass in 10 or +2 or in UG but v realise our mistakes and concentrate in our studies ,improve our general knowledge as well as students handling knowledge etc....and scored well in BEd + TET.But now V r rejected by our past performance.whether it is right or wrong...Is TNPSC or UPSC or other state government in India following such rules for appointment.
You are right .
Don,t blame gov, i think u r low scorer in school
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை நானும் +2 பிடிக்கிற போது சில காரணமாக என்னால் ஓராண்டு படிக்க முடியவில்லை அடுத்த ஆண்டு படித்து குறைவாக மதிப்பெண் பெற்று (48% ) முடுத்தேன் DTEd-80%,BSC-50%,BEd-80%,இப்படி படித்து உள்ள என்னை போன்றோர் ஆசிரியர் ஆக முடியாது இந்த வவெயிட்டேஜ் முறையில்.நல்ல வேலை 2012ல் tet மூலமாக ஆசிரியர் பணி பெற்று பணியில் உள்ளேன்..இல்லை எனில் சாகும் வரை எனக்குஆசிரியர்பணி கிடைத்தது இருக்குமா?
ஆம் நான் குறைவாக மதிப்பெண் பெற்றவர் அதனால் என்ன 1100/1200(+2ல்) பெற்றவர் டி யி டி ல் தோல்வி .நான் +2 தோல்வி அடைந்து பின்னர் 48% மதிப்பெண் பெற்றவர்2012ல்tet pass செய்து பணியில் உள்ளேன் என் படிப்பு MA.,BSc.,DTEd.,BEd எனவே mark என்பது வெறும் வேஷம் 1100 mark +2 எடுத்த ஒருவர் ஏன் tet ல்150க்கு 90markஎடுக்க முடியவில்லை
Is it +2 commerce or voccational group mark 1050 = Bio maths 976.Bio maths students work very hard when compare to commerce group students.Also bio maths students has the ability to teach all subjects.as well as commerce ,vocational group practical mark 400 bio maths practical mark 150 only.But second grade appointment Both group students treated as same how v able to digest this
May 20 tet paper 1,2selection velivida poranga ithu trb news unmaina vishayum
Mark eduthaven elam puthi sali alla...edukathavan mutalum alla...
தாங்கள் கூறுவது உண்மை
TET ல் தேர்வானஅனைவருக்கும் தொகுப்பு ஊதியத்தை6000 வழங்கி ஓவ்வொரு ஆண்டும் 10000 பேரை TET MARK அடிப்படையில்பணி நிரந்தரம் செய்தால் ஓரளவுக்கு பிரச்சினை தீர்ந்து விடும் அல்லவா
Mr. Shanmugam your point is very valid regarding first comment. Because many people don't realise the importance of education till they pass out of school. Only when they enter college they see the reality of the world and start to study well and try to achieve.
But the rational behind TRB is that the subjects studied by a student in 10th and 12th is based on school education for which mark is allotted a certain percentage.
So when TRB is considering the marks of education, it should also take in to consideration the teaching experience and employment seniority. This will provide opportunity for teacher's with good hands on experience which will benefit the students.
But your second comment on comparing a Bio-Math student with commerce student is not reasonable. Because each subject has its own pros and cons. So when a person is choosing a subject it is matter of personal choice. When a student gets good marks in his/her subject it shows the ability of that person in the particular subject, so a student who has studied Bio-Math is in no way superior to a Commerce student.
More over getting good marks depends on the ability of the students. Because your argument is due to 400 marks in practical the student is above Bio-Math who has only 150 marks is not rational.
A good teacher is one who sees all the subjects equally and creates positive beliefs on the subject, so don't neglect or under estimate other subjects.
இங்கு பதிவிட்டுள்ள யாருமே வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்பதை ஏன் வலியுறுத்தவில்லை?
DTEd அல்லது BEd முடித்தவர்களுக்கு “இவர்கள் ஆசிரியர்களாகிவிட்டனர்” என்று சொல்லி அரசு சான்றிதழ் வழங்குகிறது.
மேலும் கூடுதல் தகுதியாக TET தேர்ச்சி பெற்றுவிட்டார்கள் என்று அதே அரசுதான் சான்றிதழ் வழங்குகிறது.
இவ்வளவிற்கும் பிறகு rank, weigtage போன்ற தேவையில்லாத பிரச்சினைகள் எதற்கு?
TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் seniority அடிப்படையில் வேலை வழங்குவதுதான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வாக அமையும்.
தரமான ஆசிரியர்கள் வேண்டும் என நினைக்கும் அரசு உண்மையில் செய்ய வேண்டியது என்ன?
DTEd, BEd படிப்பில் சேர்க்கும் போதே கடுமையான screening முறைகளைக் கையாண்டு தகுதியானவர்களை மட்டுமே சேர்க்கவேண்டும்.
அதை விட்டுவிட்டு படித்து முடித்தவர்களுடைய வேலை வாய்ப்பை பகல் கனவாக ஆக்கக்கூடாது. DTEd,BEd போன்றவற்றில் இடம் கிடைக்காதவர்கள் காலத்தை வீணாக்காமல் வேறு வாய்ப்புகளைத் தேடிச்சென்று உருப்பட்டுவிடுவார்கள் அல்லவா?
shan உங்கள் கருத்து சரியே.ஆனால் admissionல் filter செய்யும்போது தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் தான் படிக்க முடியும் ஏனென்றால் மீண்டும் மதிப்பெண் தான் அங்கே முக்கிய பங்கு வகிக்கும் .மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் புத்திசாலிகள் அல்ல கிராமத்தில் படித்த எங்கள் சமூகம் பாதிக்கும் கிராமத்தில் படித்த நாங்கள் ஆசிரியர் ஆகமுடியாதே ஆககூடாதா?
Post a Comment