ஆசிரியர் தகுதி
தேர்வு, இரண்டாம் தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் தேர்வர்களுக்கு, சான்றிதழ்
சரிபார்க்கும் பணி, மாநிலம் முழுவதும், நேற்று துவங்கியது.
இட ஒதுக்கீடு பிரிவினருக்கு,
தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத மதிப்பெண் சலுகையை, தமிழக அரசு வழங்கியதால், இரண்டாம்
தாளில், கூடுதலாக தேர்ச்சி பெற்ற, 22 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும், 28 மையங்களில், வரும் 12ம் தேதி வரை, இப்பணி நடக்கிறது. 'வெயிட்டேஜ்'
மதிப்பெண் கணக்கிட, புதிய முறையை பின்பற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு
உள்ளது. எனவே, தேர்வுக்கான மதிப்பெண் குறித்து, தமிழக அரசு புதிய முடிவு எடுக்காததால்,
தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரிபார்க்குமாறு, அலுவலர்களுக்கு, ஆசிரியர் தேர்வு
வாரியம் (டிஆர்.பி.,) உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு முறைக்கு, புதிய
மதிப்பெண் முறையை அறிவித்தபின், 15 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.
No comments:
Post a Comment