Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 12, 2014

    பிளஸ் 2 தேர்ச்சி குறைவு : தலைமை ஆசிரியரின் வீட்டுச்சுவரில் சஸ்பெண்ட் உத்தரவு

    பிளஸ் 2 தேர்ச்சி குறைந்த பள்ளி தலைமை ஆசிரியரின் சஸ்பெண்ட் உத்தரவு அவரது வீட்டில் இரவு ஒட்டப்பட்டது.. குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லீலாவதி, படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர் பொறுப்பு கிருஷ்ணதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பளுகல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் அந்த  பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவுகள் தேர்வு முடிவு வெளியான 9ம் தேதி இரவு பிறப்பிக்கப்பட்டது. 


    மேலும் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு காரணமான ஆசிரியர்கள் 12 பேர் மீதும் உங்கள் மீது ஏன் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரணியல் அரசு மேல்நிலை பள்ளியில் கணித பாட ஆசிரியர்கள் 2 பேரும், இயற்பியல், வரலாறு, கணக்குபதி வியல் ஆசிரியர்கள் தலா ஒருவரும் நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளனர். இதே போல் பளுகல் அரசு மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி பிரிவில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் கணக்குபதிவியல் பாடம் நடத்திய ஆசிரியர்கள் 2 பேர் வணிகவியல் மற்றும் எக்னாமிக்ஸ் ஆகிய பாடங்களை கூடுதலாக நடத்தியுள்ளனர். தற்போது அவர்கள் மீதும் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    முதன்மை கல்வி அலுவலக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை நேரில் சந்தித்து சஸ்பென்ட் உத்தரவை வழங்க சென்றனர். முன்னதாக இது தொடர்பான தகவல் வெளியானதால் பலரையும் நேரில் சந்திக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இரணியல் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியரின் வீடு தக்கலையில் உள்ளது. அவரது வீட்டிற்கு சென்ற அலுவலர்கள் இரவு 10 மணிக்கு அவர் வீட்டில் இல்லாததால் வீட்டு சுவரில் சஸ்பெண்ட் உத்தரவை ஒட்டிவிட்டு திரும்பியுள்ளனர்.  

    தேர்ச்சி விகிதம் குறைந்ததாக கூறி தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் மட்டும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறி ஆசிரியர் சங்கங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இதற்கிடையே ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு ஆசிரியர் கழகம், தொழிற்கல்வி ஆசிரியர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்த நிர்வாகிகள் அமைச்சர் பச்சைமாலை நாகர்கோவிலில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டனர்.

    20 comments:

    Anonymous said...

    100% vaangina deeo promotiona?

    Anonymous said...

    Students padikatharku Teachers enna panuvanga.Result Result nu teachers than torcher panuranga . Students cooperation illama eppadi result konduvaramudiyum.Teachers ku than stress athigama iruku.

    Anonymous said...

    All must pass means ; no need to coduct exam & no need to waste govt. Revenue

    Anonymous said...

    No da chellam Azhakoodaathu.....

    Anonymous said...

    idu yar edutha nadavadikai? Palli kalvi thuraiya? Alladu ceo kaniyakumariya?

    Anonymous said...

    the reason: all pass system . not all the students r studying in this system ....

    Anonymous said...

    when do next election come

    Anonymous said...

    In English there is a saying that
    "We can lead ten horses to the water but we cannot make them to drink".

    Anonymous said...

    It is a known fact for a true educationist that students performance depend on their IQ level,as such it is irrational and meaningless to blame the teachers for the poor performance of the students.

    Anonymous said...

    It is a known fact for a true educationist that students' performance depends on their IQ level,as such it is meaningless to blame the teachers for the poor performance of the students in the examination.So stop blaming the teachers and find some way to improve their IQ level.

    Anonymous said...

    It is the mistake of CEO.If he visit the schools frequently (at least 3 times in a year)and give ideas and encourage the teachers defenetly this situation will not come. I think he(CEO) did not do his job correctly.I think he is the first person to get punishment.

    Anonymous said...

    போதிய ஆசிரியர்கள் இல்லை! கூடுதல் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை! மாணவர்கள் 9 வரை அ, ஆ இ ஈ தெரியாமலே பாஸ்!எங்கே போகிறது கல்வித்துறை??!

    Anonymous said...

    I STRONGLY CONDMN THIS ACTION TAKEN BY CEO. RESULT IS NOT THE TOOL TO ACCESS THE TEACHERS QUALIFICATI0N. TEACHERS ARE READY TO WORK HARD BUT THE STUDENTS, PARENTS, SOCIETY AND EVERYTHING AROUND THE SCHOOL ENVIRONMENT IS COOPERERATE WITH SCHOOL MANAGAMENT EVENTHOUGH THE EDUCATION DEPARTEMENT. THEY ARE NOT CONSIDERING THE PROBLEMS IN THE SCHOOL PREMISES.

    ஆரோக்கியராஜ் said...

    நடவடிக்கை எடுத்த அதிகாரி, முன்பு தலைமை ஆசிரியராக பணியாற்றிய போது 100% தேர்ச்சி கொடுத்ததாக இருப்பார் போலும் .இல்லாவிட்டால் தூக்கத்தில் உத்தரவு போட்டிருப்பார்.

    ஆரோக்கியராஜ் said...
    This comment has been removed by the author.
    Anonymous said...

    ஆசிரியர் பணி அடிமைப்பணி என்றாகி விட்டது.எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டுத்தான் ஆகணும் போல.

    இரா,அருள்ராஜ் said...

    திரு,ராதாகிருஸண்ன் அவர்கள் ஒரு திறமை இல்லாத முதன்மைக்கல்வி அலுவலர் அவர் தயாரித்து வழங்கிய கையேடு கட்டகம் தான் மாணவாக்ளை மதிப்பெண் குறைவு ஏற்பட காரணம் 200 மதிப்பெண் வினாக்களுக்கு குறைவான மதிப்பெண் தான் கட்டகம் முலம் பெற முடியும் ஆகவே விளம்பர பிரியர் மீது இயக்குனர் நடவக்கை எடுக்கவேண்டும்
    இரா,அருள்ராஜ் (முதுகலை ஆசிரியர்)

    Anonymous said...

    எந்த ஒரு விஷயத்திலும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுப்பது தவறு.

    Anonymous said...

    இதுபோல் மற்றொரு அதிகாரி உத்தரவு போட அஞ்சும் அளவுக்கு ஆசிரியர்கள் இணைந்து போராட்டம் நடத்தி போடப்பட்ட உத்தரவை திருமபப்பெற செய்ய வேண்டும்.இல்லையென்றால் ஆசிரியர்களின் மீதான அடக்குமுறை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

    இரா,அருள்ராஜ் said...

    ஆசிரிய்ர் சமுதாயமே விழித்து எழு அடிமை இல்லை நீ பல பேராட்டக்கழம் கண்ட வீர வேங்கைகளே ஆசிரிய்ர் சமுதாயமே ஏன் இன்னும் கலக்கம் கன்னியாகுமரி மாவடட் முதன்மைக்கல்வி அலுவலர் கல்வித்துறை செயலர் என நினைப்பா உன் கடட்கத்தால மாணவர்கள் கல்வியில் உயர முடியவில்லை மதிப்பெண் குறைகிறது 12 பாஸ் தான் கிடைக்கிறது கெத்தனார் வேலைக்கு தான் செல்ல முடியும் எஞ்ஜினியர் ஆக முடியவில்லை இதனை விளம்பரப்படுத்த வேண்டாமா ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு இல்லையேல் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தான்