தமிழகம்
முழுவதும் கடந்த மாதம் 24ம்
தேதி, நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.
வரும் 16ம் தேதி வாக்குகள்
எண்ணப்படுகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட்ட
அரசு பணியாளர்கள், தபால் மூலம்
வாக்களிக்கலாம்
என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து
உரிய அதிகாரிகளிடம் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான
கையொப்பம் பெற்று, தேர்தல் ஆணையத்திடம்
விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். இதற்கான காலக்கெடு வாக்கு
எண்ணுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு வரை உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட
வடசென்னையை சேர்ந்த அரசு பணியாளர்கள்
ஏராளமானோருக்கு, தபால் மூலம் வாக்களிப்பதற்கான
விண்ணப்பம் இதுவரை வந்து சேரவில்லை.
இதனால்,
வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளை
சேர்ந்த அரசு பணியாளர்கள் தபால்
வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி
தேர்தல் அதிகாரியாக பணியில் ஈடுபட்ட தாசில்தாரை
கேட்டபோது, ‘தேர்தலில் பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு, தபால்
மூலம் வாக்களிக்க ஏற்கனவே விண்ணப்பம் அனுப்பப்பட்டுவிட்டது.
அவர்களிடம் விண்ணப்பம் சேரவில்லை என்றால், நாங்கள் ஒன்றும் செய்ய
முடியாது’ என்றார். மேலும், அவ்வாறு விண்ணப்பம்
கிடைக்காத பட்சத்தில், வேறு எங்கு விண்ணப்பம்
பெறுவது என கேட்டதற்கு, ‘எங்கும்
விண்ணப்பம் வாங்க முடியாது. மீண்டும்
அவர்களுக்கு அனுப்புவதற்கு நேரமும் இல்லை‘ என்றார்.
எனவே, வாக்குச்சீட்டு கிடைக்காத தேர்தல் பணியாளர்கள், குறிப்பிட்ட
அலுவலகத்தில் சென்று தங்களது அடையாள
அட்டையை காண்பித்து, விண்ணப்பத்தை பெற வழி செய்ய
வேண்டும். சாதாரண மக்களுக்கு, வாக்களிப்பது
உரிமை என கூறி விளம்பரம்
செய்யும் தேர்தல் ஆணையம், படித்த
ஜனநாயக கடமையை செய்யும் அரசு
ஊழியர்கள் வாக்களிக்க முடியாமல் செய்வது நியாயமா. இதற்கு
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா
என சமூக ஆர்வலர்கள் கேள்வி
எழுப்பி உள்ளனர்.
2 comments:
புதிதாக பணியில் சேர்ந்த வெளி மாவட்ட ஆசிரியர்களுக்கும் இதே நிலைமை தான்.
pudukkottai dt teachers also not receiving their
ballot papers
Post a Comment