தனியார்
பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ்
சேர்க்கப்படும் மாணவர்களுக்கான செலவு தொகை ரூ.25
கோடியை தமிழக அரசு
வழங்கும்
என்று உறுதி அளித்ததை அடுத்து
தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர்
சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின்
சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சென்னையில் நடந்தது.
தனியார் பள்ளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய
அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் தனியார் பள்ளிகளில்
25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதில் உள்ள பல்வேறு சிக்கல்கள்
குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு
கொண்டு வந்த இலவச கட்டாய
கல்வி திட்டத்தை தனியார் பள்ளிகளில் அமல்படுத்துவதில்
உள்ள சிக்கல்கள் அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ள
பல்வேறு அம்சங்கள் தனியார் பள்ளிகளை பாதிப்பதாக
இருக்கிறது. அந்த சட் டத்தை
முறைப்படுத்தாதவரை இந்த ஆண்டு மாணவர்
சேர்க்கை சாத்தியம் இல்லை.
நர்சரி,
பிரைமரி பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் 5 பிரிவுகளுக்கு
மேல் தொடங்க கூடாது என்று
பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க கூடாது என்று கட்டுப்பாடுகளை
விதிக்கின்றனர். ஆனால் அரசு பள்ளிகளில்
அதிகமாக சேர்க்கின்றனர். அதேபோல எங்களுக்கும் விதிவிலக்கு
அளிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் தனியார்
பள்ளிகளின் வாகனங்களுக்கு பர்மிட் கொடுப்பதில் பல
குழப்பங்கள் இருக்கின்றன.குறிப்பாக சென்னையில் சில இடங்கள் காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்டங்களில் வருகின்றன. அந்த பகுதிகளில் இயங்கும்
பள்ளிகளின் வாகனங்களுக்கு பர்மிட் கொடுக்கும்போது சென்னை
மாவட்டத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு பர்மிட் வழங்குவது
தொடர்கிறது. அங்கீகாரம் வழங்குவதிலும் கெடுபிடிகள் உள்ளன. இதனால் 1000 பள்ளிகள்
அங்கீகாரம் புதுப்பிக்க முடியாமல் உள்ளன. பள்ளிகளின் இடப்
பிரச்னையால் அங்கீகாரம் வழங்குவதிலும் சிக்கல்கள் தொடர்கிறது.
மேலும்,
இலவச கட்டாய கல்விசட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி
இயலாதவர்களுக்கு 25 சதவீத இடம் ஒதுக்க
வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை
கூறுகிறது. ஆனால் தனியார் பள்ளிகளுக்கான
சலுகைகளை தருவதில் குழப்பம் நீடிக்கிறது. அதனால் இந்த ஆண்டு
மாண வர் சேர்க்கை நடத்த
முடியாது என்று தனியார் பள்ளிகளின்
கூட்டமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது.இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்
இயக்குநர் பிச்சை மற்றும் பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகிகளை
அழைத்து பேசினர். அப்போது, கடந்த ஆண்டுகளில் தனியார்
பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ்
மாணவர்களை சேர்த்த செலவினங்களை கொடுக்க
வேண்டும் என்று தனியார் பள்ளிகளின்
நிர்வாகிகள் கேட்டனர். மேலும் பள்ளிகளுக்கு தொடர்
அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும்
கேட்டனர். அவற்றை செய்து கொடுப்பதாக
அரசு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்தனர்.
இதுகுறித்து
தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் கூறியதாவது: தனியார் பள்ளிகளின் சங்கங்களை
சேர்ந்தவர்கள் 15 பேரை அழைத்து பள்ளிக்
கல்வித்துறை செயலாளர் சபீதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனியார் பள்ளிகளுக்கான அனைத்து உதவிகளையும் செய்து
கொடுக்கிறோம். மத்திய அரசு கொண்டு
வந்த கட்டாய கல்வி உரிமைச்
சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம்
இயலாத மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். 2012-2013ல்
மாணவர் சேர்க்கை ஒதுக்கீட்டுக்கான செலவினத்தை தர இயலாது. 2013-2014ம்
ஆண்டுக்கான மாணவர் சேர்க் கையில்
25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டதற்கு ரூ.25 கோடி வழங்க
மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அது
வரவில்லை என்றாலும் மாநில அரசின் சார்பில்
வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று
சபீதா தெரிவித்தார். அதன்பேரில் நாளை முதல் மாணவர்கள்
சேர்க்கையை தொடங்க உள்ளோம். இவ்வாறு
நந்தகுமார் தெரிவித்தார்.
சென்னை
மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
கட்டாயக்
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் நலிவுற்ற
மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான
விண்ணப்பங்கள் 18ம் தேதி வரை
இலவசமாக வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட
ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.சென்னை மாவட்டத்தில் உள்ள
சிறுபான்மையற்ற சுயநிதி பள்ளிகளில் கட்டாயக்
கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் பள்ளிக் கல்வித்துறை
அரசாணை எண்.60ன்படி, நலிவுற்ற
மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்குமான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான
விண்ணப்பங்கள் தற்போது அந்தந்த பள்ளிகளிலேயே
வழங்கப்பட்டு வருகிறது. இவ்விண்ணப்பங்களை கல்வித்துறை அலுவலகங்களிலும் வழங்க வேண்டும் என
அரசு அறிவுறுத்தியுள்ளதால் விண்ணப்பங்கள் அந்தந்த பள்ளிகள் மற்றும்
கல்வித்துறை அலுவலகங்களில் வருகின்ற 18ம் தேதி வரை
இலவசமாக வழங்கப்படும்.
No comments:
Post a Comment