கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட கோரிக்கை மனு விவரம்:
ஆசிரியர்களின் பணி அனுபவத்தைக் கணக்கில் கொள்வதால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பி.எச்டி. பட்டம் பெற்றும், ஸ்லெட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் உள்ளனர். இவர்களின் பணிக் காலத்தையும் கணக்கில் கொண்டு அவர்களின் அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிட வேண்டும்.
இதன் மூலம் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணி நியமனம் பெற முடியும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment