Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 19, 2014

    பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களின் கோரிக்கை

    புரட்சி தலைவி அவர்களுக்கு, அம்மா/அய்யா, நாங்கள் கடந்த 1998 முதல் கணினி ஆசிரியர்களாக மாதம் 2000 சம்பளத்தில் பணியாற்றி வந்தோம். ஏழை மாணவர்களுக்கு சேவை செய்த காரணத்தினால் கடந்த 2008 ம் வருடம் சிறப்பு ஆசிரியர் தேர்வு வைத்து 35 சதவீதத்திற்கு மேலே உள்ளவர்களை தேர்வு செய்து எங்களை நிரந்தர பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள் சொல்லவில்லை எங்களுக்கு 35 சதவீதம் போதும் என்று அந்த நேரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சதவீதத்தை குறைத்து மதிப்பீடு செய்தார்கள். எங்களையும் தேர்வு செய்தார்கள்.

    பின்னர் கணினி பட்டதாரிகள் வெளியே இருந்து கொண்டு கோர்ட்டில் Case போட்டார்கள். அதை நடத்தியது ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். எங்களுக்கு ஒருமுறை அரசு பணியில் தேர்வு செய்து விட்டார்கள் மறுபடியும் வெளியே அனுப்ப மாட்டார்கள் என்று தைரியமாக இருந்தோம். ஆனால் வக்கீல் நளினி சிதம்பரம் என்ன செய்தார்களோ எங்களை திரும்பவும் தேர்வு எழுத வேண்டும் என்று வாதிட்டார், அதற்கு சரி என்று சொல்லி எங்களுக்கு திரும்பவும் தேர்வு வைக்க ஆணைபிரப்பித்தது உச்சநீதமன்றம்.(அவர்கள் அமைச்சரின் மணைவி என்பதால்), கோர்ட் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தண்டிப்பதற்கு பதிலாக எங்களை தண்டித்தது.

    நாங்களும் ஆசிரியர் தேர்வு வாரியததால் மறுதேர்வு எழுதினோம், அதில் நாங்கள் அநேகமானவர் தோல்வியை தழுவினோம். ஏனெனில் எங்களுக்கு நடத்திய தேர்வில் 42 கேள்விகள் தவறு,  40 சதவீத கேள்விகள் தவறு என்னும் பட்சத்தில் எப்படி தேர்வு எழுத முடியும். நாங்கள் 42 கேள்விகள் தவறு என்று சொன்னோம். இதை கோர்ட்  MADRAS IIT க்கு அனுப்பி தவறான கேள்விகளை கண்டுபிடிக்க சொன்னது. MADRAS IIT கேள்விகளை ஆராய்ந்து 20 கேள்விகள் தவறு என்றும் 7 கேள்விகளுக்கு பதில் கூறமுடியவில்லை என்றும் கூறியது. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடுவதுதான் முறை(ஆசிரியர் தேர்வு வாரியம் செய்த தவறு)ஆனால் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150 ல் இருந்து கழித்து 130 க்கு மதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள். 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று  JUDGEMENT -லேயே கூறப்பட்டுள்ளது. இதனால்தான் 652 ஆசிரியர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை. 

    அம்மா நாங்கள் 14 வருடங்களாக அரசு பள்ளிகளில் வேலை பார்க்கின்றோம். எங்களுக்கு தவறான கேள்விக்கு மதிப்பெண் போடாமல் எங்களை தவிக்க வைத்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம். 

    அம்மா எங்களை வெளியே அனுப்ப வேண்டும் என்பது அவசியம் இல்லை. இவ்வளவு குளருபடி இருக்கும் போது எதற்கு இந்த அவசர முடிவு இந்த கல்வித்துறைக்கு. 
    இப்போது ஆசிரியர் தகுதித் தேர்விற்கு 6 தவறான கேள்விக்கு மதிப்பெண் போட்டு 4500 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வில் 21 தவறான கேள்விக்கு மதி்ப்பெண் போட்டு தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 12 ம் கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்கி உள்ளது. 
    அப்படியானால் நாங்கள் மனிதர்கள் இல்லையா, அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா. 

    கல்வித்துறை செய்த இந்த அவசர நிலையால் எங்கள் 652 கணினி ஆசிரியர்களில் ஒருவர் மனம் நொந்து இறந்து விட்டார். மதுரையில் ஒரு ஆசிரியையின் மகன் வேலை இழந்த காரணத்தினால் அம்மா படிக்க வைக்க மாட்டார்கள் என்று எண்ணி இரவில் தூக்கில் தொங்கி இறந்து விட்டான். இதற்கு காரணம் ஆசிரியர் தேர்வு வாரியம். 

    அம்மா நாங்களும்  Home Loan, Society Loan என்று ஏகப்பட்ட கடன்களை வாங்கி விட்டோம். சாவதற்கு அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஏனென்றால் பி்ள்ளைகள், மனைவிகள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் . அம்மா இந்த தொடர்ந்தால் எங்களுக்கும் சாவதை தவிர வேறவழியில்லை அம்மா, 

    அம்மா நாங்கள் ஒன்றும் தகுதியில்லாதவர்கள் இல்லை அம்மா. நாங்கள் 14 வருடம் 12 ம் வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறோம். எங்களை தகுதியில்லாதவர்கள் என்று சொல்கிறார்கள்.

    அம்மா எங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் அம்மா காக்க வேண்டும். நாங்கள் அணைவரும் நீங்கள் தேர்தலில் ஜெயிக்க பாடுபட்டோம். எங்கள் நண்பர்கள், குடும்பங்கள் அணைவரையும் அ.தி.மு.க வுக்கு ஓட்டு போடு்ங்கள் என்ற கேட்டு கொண்டோம் அம்மா, நாங்கள் அ.தி.மு.கவுக்கு ஆதரவு என்று பேப்பரில் கூட போட்டோம அம்மா. 

    அம்மா, அவர்கள் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

    5 comments:

    Anonymous said...

    Good judgement tet 2012 la 82 mark vangena nagalum unkalku than vote pannum ssa contract labourum ssa part time teacheeum unkaluku than vote pannom engalaiyum permanant pannungal amma

    Anonymous said...

    Amma nangalum 200 vangamal unkaluku than vote pannom

    Anonymous said...

    Trb tamil pg posting pottachi amma enkaluku 21 mark court thandum trb mark podasalai amma

    Anonymous said...

    Proper qualification Bsc Bed computer science irundum oru person koda intha velaiku poga muduyila amma

    Anonymous said...

    Proper thinking ungalai vazhi nadathum sanga thalaivarkalukku vendum . Govt i posting poda vidaamal 9 varudamaga case pottu pottea 15000 cs padithavargalai vetti velai parthu pulamba vaithuvitteergal iniyavathu sangathil iruppavargal sindhithu cs padithavargalai ninaithu parthu court pakkam pogamal engalai cs b.ed padithavargalai kappatrungal govt court solvathai appadiye kettuvidathu avargal ninaithal than namakku velai enbadhai unarungal part time teachers kooda court padi eari govt i sollavaithu vittargal (10 varudam velai parthal permanent kidaiyadhu endru)