Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 8, 2014

    நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : நல்வழி காட்டும் மனநல டாக்டர்கள்

     நாளை (மே 9) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன. எல்லோருமே முதலிடம் பெற்றால், அதில் என்ன பெருமை? எல்லோருமே டாக்டர், இன்ஜினியர்களானால், மற்ற வேலைகளை யார்
    செய்வது? படிப்புக்கேற்ப கல்லூரி, எதிர்காலம் எங்கேயும், எல்லோருக்கும் உண்டு. மதிப்பெண் குறைந்தாலோ, ஒரு முறை தோற்றாலோ தவறில்லை. அந்தத் தோல்வி தரும் வலியை, வெற்றியாக்கும் வெறி வேண்டும்விலை மதிப்பில்லாதது... மீண்டும் வராதது உயிர் என்ற நினைப்பு... பெற்றோருக்கும், பிள்ளைக்கும் எப்போதும், நினைவில் வேண்டும் என்கின்றனர், மனநல டாக்டர்கள்.

    பிள்ளை என்பதே பெருமை தான்

    டாக்டர் விக்ரம் ராமசுப்ரமணியன்: பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகளின் மனஅழுத்தத்திற்கு பெற்றோர்கள் தான் காரணம். உங்களது ஆசை, எதிர்பார்ப்பு நடக்காவிட்டால், பிள்ளைகளை குத்தி காட்டாதீர்கள். பெற்றோருக்கு பயந்து தான், பிள்ளைகள் தவறான முடிவைத் தேடுகின்றனர். நல்ல மதிப்பெண் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், உங்கள் பிள்ளை என்பதே பெருமையான விஷயம். அடுத்தவீடு, எதிர்வீடு, உறவினர் வீட்டுப் பிள்ளைகளின் மதிப்பெண்ணுடன், ஒப்பிடாதீர்கள். தோல்வியடைந்தால் கூட, மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு இருக்கிறது, என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்துங்கள். மறந்தும் கூட
    அவமரியாதையாக, அலட்சியமாக நடத்தாதீர்கள். மதிப்பெண் குறைந்தால், உங்கள் பிள்ளை தான், மனதளவில் சோர்ந்து போயிருப்பார். "உனக்கு... நாங்கள் இருக்கிறோம்' என்ற நம்பிக்கை தரவேண்டியது மட்டுமே, பெற்றோரின் கடமை. இப்போதே அரவணைத்து ஆறுதல் சொல்லுங்கள்.
    மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையல்ல


    டாக்டர் தீப்: படிப்பும், மதிப்பெண்ணும் வாழ்க்கையின் ஓர் அங்கம் தான். அதுவே வாழ்க்கையல்ல. நீங்கள் அந்த நேரத்தில் என்ன எழுதியிருக்கிறீர்களோ... அதற்கு தான் மதிப்பெண்ணே ஒழிய, உங்கள், திறமை, அறிவை எடைபோடுவதல்ல. வெறும் மதிப்பெண் மட்டுமே, திறமையை முடிவு செய்யாது. தோல்வியடைந்தால், அடுத்த நிலையை யோசிக்க வேண்டும். மதிப்பெண் குறைந்தால், வேறு என்ன படிக்கலாம் என்று தான் சிந்திக்க வேண்டும். ஒருவேளை பெற்றோர் வருத்தப்பட்டால் கூட, "உங்கள் நன்மைக்காக தான்... அதில் கோபம் இல்லை' என்பதை, புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் இல்லாத உலகத்தை, பெற்றோரால் நினைத்துப் பார்க்க முடியுமா? கேவலம்... மதிப்பெண்ணுக்காக, பெற்றோரை ஆயுள் முழுவதும் அழவைக்கலாமா? மனஅழுத்தம், மனக்குழப்பம் இருக்கிறதா... அம்மா, அப்பா, நண்பரைத் தேடிச் செல்லுங்கள். அவர்களுடன் சேர்ந்து பேசினால், மனம் தெளிவாகும். உங்களுக்கு வழிகாட்ட, 24 மணி நேரமும் நாங்கள் தயாராக இருக்கிறோம், மாணவர்களே... 98421 78739க்கு அழையுங்கள்.

    3 comments:

    Anonymous said...

    Nice.... It should reach every parent and student. Good initiative!

    Anonymous said...

    ரிசல்ட் கேட்கும் அதிகாரிகளுக்கு ஆலோசனை சொல்ல யாராவது மனநல மருத்துவர் இருக்கிறாங்களா?

    Anonymous said...

    ஓர் ஆசிரியரை விட வேறுயாரும் அவ்வளவு பெரிய வழிகாட்டுபவரோ
    நலன் விரும்பிகளோ இல்லை அனைத்தும் நலமாய் முடியும்வரை ஆசிரியரின் அறிவுறை வழிகாட்டுதல் தேவை பின்னர் ஆசிரியர் பெயர் வருவதில்லை,அனைத்தும் மற்றவர்களாள்தான் நடந்ததாம்..படுக்கும்போது வழிகாட்டாத இவர்கள் இப்போதுமட்டும் தவறாக முடுவு எடுக்காதீர்கள் எங்களிடடம் வாருங்கள் வழிகாட்டுகறோம் என்பது எவ்வாறு சரியாகும்...பெற்றோரை அடுத்து ஏனியாய் விளங்கும் ஆசிரியருக்குதான் மாணவர்கணளபற்றி நன்குதெரியும்...