Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    NHIS 2016 - 100% மருத்துவ சிகிச்சை

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை கல்விச்சரகம் வலையபட்டி இந்து ஆரம்பப்பள்ளி உதவி ஆசிரியை திருமதி.ஜெயலட்சுமி கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


    அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்கியும், United India Assurance (UIA) நிறுவனத்தால் அறுவைசிகிச்சைக்கு 30,000 மட்டுமே பேக்கேஜ் திட்டத்தின் கீழ் மருத்துவமனைக்கு வழங்கப்படும், மீதம் 1,30,000 தாங்கள் செலுத்தவேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையால் தெரிவிக்கப்பட்டது.சம்பந்தபட்ட ஆசிரியர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) மாவட்ட நிர்வாகிகள் வைரமுத்து, செல்வகணேசன் ஆகியோரைத் தொடர்பு கொண்டார். தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் ஆசிரியரிடம் பணம் எதுவும் கட்ட வேண்டாம். 
    முழுத்தொகையும் NHIS திட்டத்தின் கீழ்  UIA செலுத்தும் எனவும்  இந்த *மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது சிகிச்சைக்குச் சேர்ந்து அறுவைசிகிச்சை, அறை வாடகை, மருந்து மாத்திரை, ஆய்வுகட்டணம்(Xray,scan), உணவு உட்பட சிகிச்சை முடிந்து வெளியேறும் வரை உள்ள செலவுகளை அடக்கிய Cashless treatment* என கூறினர்.

    பின் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க (TNGEA) மாநிலச் செயலாளர் ச.இ.கண்ணன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செல்வகணேசன், வைரமுத்து ஆகியோர்  மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தி சிகிச்சை பெற்ற ஆசிரியர் ரூ.1,30,000 செலுத்தாமல் வீடு திரும்ப உதவினர்.

    இதுபோன்று மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மருத்துவமனைகளுக்குப் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என தமிழ்நாடு அரசு ஊழியரி சங்க மாநிலச் செயலாளர் ச.இ.கண்ணன் தெரிவித்தார்.

    மேலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள தனியார்மருத்துவமனைகள் சிகிச்சைக்குப் பணம் செலுத்த நிர்பந்தித்தால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் / ஆசிரியர் உடன் அந்தந்த மாவட்ட TNGEA / TNPTF நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்

    No comments: