தமிழ் எழுத்துக்களை, சைகை மற்றும் ஒலிப்பு முறைகள் மூலம், நவீன முறை கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான, படப்பிடிப்பு, அவிநாசி அருகே நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், தமிழ் எழுத்துக்களை, சைகை மற்றும் ஒலிப்பு முறை மூலம், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு புதிய கற்பித்தல் முறையை, அறிமுகப்படுத்த உள்ளது.
முதல் கட்டமாக தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களையும், சைகை மற்றும் ஒலிப்பு முறைகளில், வீடியோ சிடி வடிவில் தயாரிக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு, அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி, சாலைப்பாளையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
தமிழர் பாரம்பரிய கலைகளை மீட்கும் வகையில், பறையாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகம், கும்மி, ஜிக்காட்டம் ஆகியவை நடத்தப்பட்டு, படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில், ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியை மல்லிகா, ஆசிரியை சத்யப்பிரியா, பஞ்சலிங்கம் பாளையம் தலைமை ஆசிரியர் கோபால் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment