’டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வில் இடம் பெற்ற வினாக்கள் மிக எளிமையாகவும், எதிர்பார்க்கப்பட்டவையாகவும் இருந்தன, ’வனத்தி’ என தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழகத்தில் பல்வேறு துறைகளில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேற்று 300 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் விண்ணப்பித்த 85,633 பேரில், 69,492 பேர் பங்கேற்றனர். 16,149 பேர் பங்கேற்கவில்லை.
கலெக்டர் வீரராகவ ராவ், டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் முத்துராஜா ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.
தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
கோடீஸ்வரி, அண்ணாநகர்: பி.எஸ்சி.,நர்சிங் படித்துள்ளேன். குரூப் 4 தேர்வு எதிர்பார்த்து அதற்காக தயாரானேன். நடப்பு நிகழ்வுகள் தொடர்பாக அதிக வினாக்கள் இடம் பெற்றன. பொது தமிழ் பகுதியிலும் நேரடி வினாக்களே கேட்கப்பட்டது. அதிக மதிப்பெண் கிடைக்கும்.
சித்ராதேவி, கோ.புதுார்: பி.இ., முடித்துள்ளேன். வினாத்தாளில் எவ்வித புதுமையும் இல்லை. பொது அறிவு, அறிவியல், கணிதம் பகுதியில் அதிக வினாக்கள் இடம் பெற்றன.
அறிவியலில் ஒருசில வினா கடினமாக இருந்தன. கணிதம், தமிழ் பகுதி எளிமையாக இருந்தன. அதிக மதிப்பெண் எதிர்பார்க்கிறேன்.
சூர்யா, சொக்கிகுளம்: பி.காம்., படித்து உள்ளேன். 2016ம் ஆண்டு நிகழ்வு குறித்த வினாக்கள் அதிகம் இடம் பெற்றன. தமிழ்ச் சங்கம், சிலப்பதிகாரம் என மதுரை குறித்த வினாக்கள் இடம் பெற்றன. கணிதம் எளிமை. பங்கேற்ற பலர் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. ’கட்ஆப்’ மதிப்பெண் இந்தாண்டு அதிகரிக்கும்.
இந்துஜா, விளாங்குடி பி.ஏ., இறுதியாண்டு மாணவி. செமஸ்டர் இருந்ததால் இதற்காக முழு அளவில் தயாராகவில்லை. அனுபவத்திற்காக எழுதினேன். வினாக்கள் எளிமையாக இருந்தன. அறிவியல் பாடங்கள் வினாக்கள் கஷ்டமாக இருந்தது. கணிதம், தமிழ் பகுதி மிக எளிதாக இருந்தன.
லாவன்யா, சின்னப்பட்டி (நத்தம்ரோடு):
பி.எஸ்.சி., படித்துள் ளேன். பொது அறிவு, அறிவியல் பாட வினாக்கள் எளிதாக இருந்தன. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் இருந்து மட்டுமே வினாக்கள் இடம் பெற்றன. பொருளியல், புவியியல் பகுதியில் இடம் பெற்ற வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தன. மொத்தத்தில் வினாக்கள் மிக எளிமையாக இருந்தன.
கயல்விழி, அழகர்கோவில்: எம்.எஸ்சி., பி.எட்., முடித்துள்ளேன். பொதுத் தமிழில் 100க்கு 90க்கும் மேலான வினாக்கள் எளிமையாகவே இருந்தன. கணிதம் பகுதியில் சில வினாக்கள் கடினமாக இருந்தது.
அதற்கு விடை கண்டுபிடிக்க அதிக நேரம் தேவைப்பட்டது. அறிவியல் பகுதியில் இடம் பெற்ற அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தன. தேவையான ’கட்ஆப்’ மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
No comments:
Post a Comment