Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் சாதிக்கும் பெண்

    ஆசிரியர் பணியை உதறிவிட்டு விவசாயத்தில் இளம்பெண் சாதனை நிகழ்த்தி வருகிறார்.சாயல்குடி அருகே குதிரைமொழி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதேவி,28. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். இவரது கணவர் விவசாயி விக்னேஷ் ராம்,33. இவர்களுக்கு 2 மகள் 1 மகன் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள பகுதி என்பதால் விவசாயம் நிலம் உவர்ப்பு தன்மை உடையதாக உள்ளது.


    இருந்தும் மனம் தளராத தம்பதியினர் இருவரும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறையினரிடம் ஆலோசனைகள் பெற்று அந்த நிலத்தை பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளனர். மா, புளி, முந்திரி, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா, நார்த்தங்காய், கொடுக்காப்புளி, நாவல், தென்னை, தேக்கு உள்ளிட்ட பலன்தரும் மரங்களை நடவு செய்துள்ளனர். ஊடு பயிராக கால்நடைகளுக்கான கட்டைப்புல் சாகுபடி செய்துள்ளனர். பயிர்களுக்கு இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மரங்கள் பலனளிக்க துவங்கியுள்ளதால் தம்பதியினர் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

    விவசாயி ஸ்ரீதேவி கூறுகையில்,“ ஆசிரியர் பயிற்சி முடித்த பின்னர், கிடைத்த அரசு வேலையை உதறிவிட்டு கணவருடன் இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் வகை, வகையான பலன்தரும் மரங்களை நட்டு அதன் மூலம் வருமானம் ஈட்டிவருகிறோம். விவசாயத்திற்கு பயன்படாத உவர் மண்ணை, மண் மாதிரி மூலம் ஆய்வு செய்து, அதிகளவில் மக்கிய இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள், மண்புழு உரம் இவற்றின் மூலம் நுண்ணுாட்டம் செய்து விவசாயத்திற்கு உகந்ததாக மாற்றியுள்ளோம். 

    இங்கு 15 அடியில் நல்ல தண்ணீர் கிடைப்பதால், கிணற்று பாசனத்தில் மகசூல் ஈட்ட முடிகிறது. பெரும்பாலான நேரங்களை விவசாயத்தில் செலவிடுகிறேன். மாலையில் அருகில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுக்கிறேன். இதுவரை வேளாண்மைத்துறையின் மூலம் எந்தவித உதவிகளும், இலவச மின்சாரம், மானியமும் பெறவில்லை. அரசு ஊக்குவித்தால், என்னைப்போன்ற படித்த பெண்களுக்கு உதவிகரமாக இருக்கும்,” என்றார்.

    No comments: