Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு அறிக்கை தாக்கல் எப்போது?

    பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட, வல்லுனர் குழுவின் பதவிக்காலம், ஒரு வாரத்திற்கு முன் முடிந்து விட்டது. அதனால், குழுவினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில், புதிதாக பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, மத்திய அரசு ஆலோசனைப்படி, பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டம், 2003ல் அமலுக்கு வந்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 


    வல்லுனர் குழு : 'பழைய ஓய்வூதிய திட்டமே தொடர வேண்டும்' என, வலியுறுத்தி, பல போராட்டங்களையும் நடத்தினர். அரசு ஊழியர்களின் கோரிக்கையை சமாளிக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, சட்டசபை தேர்தலுக்கு முன், வல்லுனர் குழுவை தமிழக அரசு நியமித்தது. தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்ததும், வல்லுனர் குழுவின் செயல்பாடுகள் துவங்கின. செப்டம்பரில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், வல்லுனர் குழு கருத்து கேட்டது. அக்டோபர், 28ம் தேதியுடன், வல்லுனர் குழுவின் பதவிக்கலாம் முடிவடைந்து விட்டது. அதனால், குழுவினர் தங்களின் அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

    ஆசிரியர்கள் உறுதி : இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொது செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்டு, இரண்டு மாதங்களாகிறது; இன்னும் குழுவின் முடிவு தெரியவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடரக்கூடாது என்பதில், ஆசிரியர்கள் உறுதியாக உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும். அதற்கு முன், உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள் குடும்பத்திற்கு, இடைக்கால ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    No comments: