Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 8, 2016

    பணி நிறைவு நாளில் பி.எப்., பணம்

    மதுரை மண்டல பி.எப்., அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரவிழா நடந்தது. இதற்கு, மண்டல கமிஷனர் ரபீந்திர சமல் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊழல் கண்காணிப்பு வார விழா நடத்தப்படுகிறது.

    துறை அதிகாரிகள் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களின் சேவை அளிப்பதில் ஏற்படும் தாமதமே ஊழலின் துவக்கம். எனவே, ஏழு நாட்களுக்குள் அவர்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்.பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை தீர்த்து வைப்பதில் மதுரை பி.எப்., மண்டல அலுவலகம், இந்தியாவிலேயே 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்திற்கு வருவதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம்.இனி, ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பணி காலம் முடிவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, அவர் சார்ந்த நிறுவனங்களிடமிருந்து, அவரது ஆவணங்கள் பெறப்படும். இதன் மூலம், அவர் பணி நிறைவு செய்யும் நாளில், பி.எப்., பணத்தை பெறும்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மண்டல உதவி கமிஷனர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

    No comments: