தேவகோட்டை - மே - தேவகோட்டை சேர்மன்
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நேர்மறை எண்ணங்கள் தொடர்பான
கலந்துரையாடல் பயற்சி மாணவர்கள் ,பெற்றோர்
முன்னிலையில் நடைபெற்றது.
கலந்துரையாடல் பயற்சிக்கு வந்திருந்தோரை 6 ம் வகுப்பு மாணவர்
வசந்தகுமார் ஆங்கிலத்தில் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ
.சொக்கலிங்கம் தலைமை தங்கினார். 7 ம்
வகுப்பு மாணவி சமயபுரத்தாள் பள்ளியில்
கடந்த ஓராண்டு காலத்தில் நடந்த
நிகழ்சிகள் குறித்து ஆங்கிலத்திலும் , 5 ம் வகுப்பு மாணவி
சுபலெட்சுமி அழகிய தமிழிலும் பேசி
அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்க வைத்தனர். பாண்டியன் கிராம வங்கியின் மண்டல
மேலாளர் கவிஞர் சபாரெத்தினம் மாணவர்கள்
மற்றும் பெற்றோரகளிடையே நேர்மறை
எண்ணங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடத்தினார்.அவர் பேசுகையில் , நாம்
எல்லா விஷயங்களையும் எட்டி பிடிக்க முடியும்.இது விந்தை உலகம்.பருப்பு வடையை வைத்து
எலியை பிடிப்பது போல ஆசிரியர் நடத்தும்
பாடத்தை மட்டும் படிப்பது சிறந்த
செயலாகாது .மெய்,வாய்,கண்,மூக்கு ,செவி,மனம்
இவைகளை ஒருங்கினைத்தலே ஆறறிவாகும்.மனித மூளையின் எடை
1400 கிராம் உள்ளது.அதில் 700 கிராம்
வலது புறமும் ,700 கிராம் இடது புறமும்
உள்ளது.வலது புற மூளை
ஒரு பூவை பார்த்து பூ
அழகாக இருக்கிறது என்று நினைக்கும்.இடது
புறத்தில் உள்ள 700 கிராம் மூளையோ அப்பூவை
அல்லி வட்டம் ,புள்ளி வட்டம்
என தனித்தனியாக பூக்களின் இதழ்களை பிரித்து அப்பூவின்
சிறப்பை பாழாக்கிவிடும் .நேரம் பொன் போன்றது.நாம் ராகு காலம்
எம கண்டம் என்று கூறி
நேரத்தை வீனடிக்கக்கூடாது
.எந்த ஒரு செயல் செய்யும்
பொழுதும் திட்டமிடல் அவசியம்.மண்ணில் பிறந்த
நாம் உலகில் ஏதேனும் சாதிக்க
வேண்டும் .கல்வியில் சிறந்து விளங்குவது என்பது
மட்டும் போதாது.அனுபவ அறிவும்
அவசியம்.அறிவை தேடி நாம்
ஓடிகொண்டே இருக்க வேண்டும்.நூலகங்குளுக்கு
சென்று அறிய வகை புத்தங்களை படிக்கபழகி
க்கொள்ளவேண்டும் .ஆங்கில ஏடுகளை படிக்கும்
பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும் .ஆங்கில அகராதியை படிக்க
வேண்டும்.ஒரு நாளைக்கு மூன்று
வார்த்தைகள் வீதம் ஒரு மாதத்திற்கு
90 வார்த்தைகள் படித்து விடலாம்.மனிதன்
பாம்பு,மனைவி , மைக் இவை
மூன்றிற்கும் பயப்பிடுகிறான்.மைக் முன்பு பேசுவதற்கு
நாம் சிறுவயதிலேயே பள்ளியில் படிக்கும்போதே மேடையில் பேசி பழக வேண்டும்.அதற்கு நிறைய வாய்ப்பு
பள்ளியில்தான் அமையும்.அதனை நன்கு
பயன்படுத்தி கொள்ள வேண்டும்.எக்காரணத்தை
கொண்டும் நம் பெற்றோரை மற்றவர்களிடம்
விட்டு கொடுக்க கூடாது.சாமியார்
ஒருவரிடம் வண்ணத்து பூச்சியை வைத்து இளைஞர்கள் நடத்தும்
வேடிக்கையை கதையாக விளக்கமாக எடுத்து
கூறி,உன் வாழ்க்கை உன் கையில்
என்பதை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில்
எடுத்து கூறினார். சிறு வயதில் கனவு
பெரிதாக இருக்க வேண்டும்.அப்துல்
கலாம் அறிவுறுத்துவது இதைத்தான் அறிவுறுத்துகிறார்.ஏன் ,எதற்கு என்று
சிந்திக்க வேண்டும்.என்று பேசினார்.கலந்துரையாடல்
பயிற்சியில் 5 ம் வகுப்பு மாணவி
பரமேஸ்வரி மேலாளர் கூறிய பழமொழியை
ஆங்கிலத்தில் கூறுமாறு கேள்வி எழுப்பினார்.உடனே
மேலாளரும் ஆங்கிலத்தில் பழமொழியை மொழிபெயர்த்து கூறினார்.கலந்துரையாடலில் மாணவி சௌமியா ,அபிநயா
,சொர்ணாம்பிகா ,ராஜேஸ்வரி,,நடராஜன் ,மாணவர் சன்முகப்ரகாஷ்ஆகியோர் கேள்விகள் கேட்டு
பதில் பெற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை சாந்தி,கலாவல்லி,வாசுகி ஆகியோர் செய்திருந்தனார்.நிறைவாக 8 ம் வகுப்பு மாணவர்
அஜித் ஆங்கிலத்தில் நன்றி
கூறினார். ஏராளமான பெற்றோரும் கலந்துரையாடலில் கலந்து
கொண்டனர்.
Thanks & Regards,
L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam School,
Devakottai.
9786113160
1 comment:
மிகவும் சிறப்பானதொரு முயற்சி. இதுபோன்ற நிகழ்ச்சிகளை மற்றப்பள்ளிகலும் நடத்தும் போது மாணவர்களிடையே நற்கருத்துகளை வளர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களது பேச்சுத்திறமை போன்றவற்றையும் வளர்க்க முடியும்.
இந்த சிறப்பான முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.
Post a Comment