தபால் ஓட்டு கிடைக்கப் பெறாத ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் மாநில செயல் தலைவர் தே. தயாளன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் சம்பத் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நடைபெற்று முடிந்த மக்களவை பொதுச் தேர்தலின்போது வாக்குச்சாவடிப் பணிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், சோழிங்கநல்லூர் பகுதிகளுக்குச் சென்றவர்களுக்கு தபால் வாக்குகள் வரவில்லை. சரியான விவரம் அளிக்காததால் 30 சதவீதம் பேருக்கு தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளது என கடந்த வாரம் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஆனால் சட்டப்பேரவை தொகுதி எண் அச்சிட்ட படிவங்களும் தொகுதி எண் அச்சிடப்படாத படிவங்களும் பயிற்சியின்போது வழங்கப்பட்டன. உத்தரமேரூர் நடந்த பயிற்சியின்போது, தொகுதி எண் 37 என அச்சிடப்பட்ட படிவங்கள் பலருக்கு வழங்கப்பட்டன. ஆனால் உத்தரமேரூர் தொகுதி எண் 36 ஆகும். இதேபோல் முதலில் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வரிசை எண்ணும், இறுதி செய்து வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் வரிசை எண்களும் வேறுபடுகின்றன. இது போன்ற காரணத்தால் சரியான விவரங்களை அளிக்கவில்லை என தபால் வாக்குகளை நிராகரித்திருந்தால் அது விண்ணப்பதாரரின் தவறாகாது.
வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் சில நாள்களே உள்ளதால், தபால் வாக்குக்கு விண்ணப்பித்து கிடைக்கப் பெறாதவர்கள் உரிய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தை நேரில் அணுகி தபால் வாக்குகளைப் பெற்று வாக்களிக்க வகை செய்ய வேண்டும்.
இதில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி தேர்தல் நடத்தும் அலுவலர்களுóககு உரிய அறிவுரை வழங்கி தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர்கள் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற ஆவன செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment