Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 16, 2014

    அரசு பள்ளிகளில் பெயரளவில் ஆங்கில வழிக்கல்வி

    அரசு பள்ளிகளில், பெயரளவிலே ஆங்கில வழிக்கல்வி திட்டம் செயல்படுகிறது.இங்கு நடந்த ஆண்டு தேர்வில், தமிழிலே கேள்வி தாள் வழங்கப்பட்டது,பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய காலமாற்றத்திற்கேற்ப, பெற்றோரிடம் ஆங்கில வழிக்கல்வி மோகம் அதிகரிப்பதால், ஏழ்மையான பெற்றோர் கூட, வட்டிக்கு பணம் வாங்கி, தனியார் பள்ளிகளை நாடுகின்றனர். இதனால்,அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து, பல கிராமங்களில் ,ஒரிரு மாணவர்களுடனே அரசு பள்ளிகள் ,செயல்படும் நிலை உள்ளது. 

    அரசு பள்ளிகளில், சரிந்துவரும் மாணவர் சேர்க்கை தடுக்கும் நோக்கில், 2011ல் ஒரு ஒன்றியத்திற்கு 5 அரசு பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்க, அரசு உத்தரவிட்டது. சில அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் வகுப்புகளை துவங்கினர். 
    இத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில், கடந்த ஆண்டு, பள்ளி தலைமை ஆசிரியர் விரும்பினால், அந்த பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி வகுப்புகள் துவங்கி, அதன் விபரத்தை கல்வி துறைக்கு தெரிவிக்கலாம் என, அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, அதிகாரிகளின் கட்டாயத்தை தொடர்ந்து, ஒரு ஒன்றியத்திற்கு 10க்கு மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளில், ஆங்கில வழிகல்வி வகுப்புகள் துவக்கினர். அரசு உயர்நிலை பள்ளிகளிலும், ஆங்கில வழியில் 6ம் வகுப்பு துவங்க அனுமதி அளித்தனர். 
    அதிகாரிகளின் உத்தரவிற்கு பணிந்து, ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ள நிலையில்,இவ் வகுப்புகள் பெயரளவிலே நடக்கிறது. தமிழ் வழியில் கற்பித்த ஆசிரியர்களே, ஆங்கில வழி கல்வி பாடங்களை கற்பித்தனர். 
    பல பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆங்கில புலமை இன்றி, பாடம் நடத்துவதற்கு தவித்தனர். ஆங்கில வழி வகுப்பிற்கு செல்லவே, ஆசிரியர்கள் அஞ்சினர். 
    இதனால், பல மாதங்களாக ,முதல் வகுப்பு மாணவர்களுக்கு, ஏ, பி,சி,டி...யே கற்பித்து வந்தனர். ஆங்கில வழி வகுப்புகளின் முன்னேற்றம் குறித்து,கல்வி துறை அதிகாரிகள் கண்காணிக்கவோ, கவனம் செலுத்தவோ இல்லை.
    ஆங்கில வழி வகுப்புகள் அரசு பள்ளிகளில் தொடர்ந்தாலும், தனியார் பள்ளி மாணவர்களிடம் உள்ள திறன், அரசு பள்ளி மாணவர்களிடம் காண முடியவில்லை. அரசு பள்ளி ஆங்கில வழி வகுப்பு மாணவர்களுக்கு, முழு ஆண்டு கேள்வி தாள் கூட, தமிழில் வழங்கி தேர்வு எழுத வைத்துள்ளதாக, பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.
    வரும் கல்வி ஆண்டிலாவது, ஆங்கில வழி கல்வியை மேம்படுத்த, கல்வித்துறை சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆங்கிலவழி கல்விக்கென தனி இயக்குனர் முதல் உதவி கல்வி அலுவலர் வரை நியமித்து, தினமும் ஒரு ஆங்கில வழி வகுப்பினை அதிகாரிகள் ஆய்வு செய்தால்,அரசின் திட்டம் பயன் தரும்.

    5 comments:

    Anonymous said...

    appamum assiriyar niyamanam seiya mateengala

    Anonymous said...

    mudhalil negativeaga pesuvadhai thavirkavum. eththunai nursury , primary matrum hr sec schoolil thamizhil nadathappadukiradhu theriyuma?

    OKKODAI.IN said...

    சாராய வியாபாரிகள் பள்ளி துவங்கி சம்பாதித்து இன்று அப் பள்ளியின் கல்வி தந்தைகள் ஆக மாறி அப் பள்ளியில் சிலை வைக்கிறார்கள் . வசதியற்ற , படிப்பில் பின் தங்கிய , ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு செய்யும் ஒரு சமூக அறப்பணி அரசு பள்ளி பணி . பணம் பார்க்க துவங்கப்பட்ட தனியார் பள்ளி இல்லை இது .வசதி படைத்த உங்களுக்கு வேண்டும் என்றால் அரசு மருத்துவ மனை , அரசு பள்ளிகள் - தேவை இல்லாமல் இருக்கலாம் . மாணவர்களில் தனிநபர் வேறுபாடு உண்டு . அதிலும் பிற பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட மந்தமான ,சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தாய் மொழி கலந்த ஆங்கில மொழியை பயன் படுத்த வேண்டும் . கற்ப்பித்லின் நோக்கம் பட பொருளை அறிய . அதே சமயம் இன்று தொழில் போட்டிக்கு ஆங்கில மொழி அறிவு தேவை . மந்தமான ,சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு எதுக்கு என நீங்கள் கூறக்கூடாது . அது அவரின் உரிமை . நீங்கள் மட்டும் ஆங்கில மொழியை படித்து நல்ல தொழிலில் ஈடுபடலாம் அவர்களுக்கு கிடைக்கக்கூடாதா ? . மந்தமான ,சராசரிக்கும் கீழ் உள்ள மாணவர்கள் எப்போதும் அதே நிலையில் இருப்பது இல்லை . சில ஆண்டுகளில் மீத் திறன் கொண்டோரையும் சாய்த்து விடுவான் . எனவே ஆங்கில மொழி தேவை. இருப்பினும் (அரசு பள்ளி சில மாணவர்) இந்த நிலையில் அவனுக்கு இந்த வழி தான் சிறந்தது . மருத்துவனுக்கு நோய்யாலியை பற்றி தெரிந்து இருக்கவேண்டும் . ஆசிரியருக்கு மாணவனை பற்றி தெரிந்து இருக்கவேண்டும் .
    உங்கள் தொழிலில் போட்டி இடும் நபர் அல்லது வென்ற நபர் உங்களை விட படிப்பில் பின் தங்கியவராக இருப்பார் . காலம் அனைவரைஊம் சமப்படுத்தும் . மொழியால் வேறுபாடக்கூடாது.

    OKKODAI.IN said...

    10 ஆம் வகுப்பில் ஆரம்பத்தில் எந்த மாணவன் படிக்காதவனோ அவனை நிர்வாகம் தண்டித்து ஆல்லது பெற்றோரை அடிக்கடி வரவழைத்து ஒருவழியாக அவனை T.C கொடுத்து அனுப்பி அப் பள்ளி 100 சத மதிப்பெண் எடுப்பது ஒன்றும் சாதனை இல்லை. அது போல் அதிக்க மதிப்பெண்(450 கு மேல்) எடுத்த மாணவனை 11 ல் சேர்த்து +2 வில் 100 சதம் எடுப்பதும் ஒன்றும் சாதனை இல்லை .
    படிக்காத மாணவனுக்கு அரசு பள்ளியில் தான் இடம் கொடுப்பார்கள் . குறைந்த மதிப்பெண்ணுக்கு கூட ஃபர்ஸ்ட் க்ரூப் கிடைக்குது . அரசு பள்ளியில் தான் சாதனை நிகழ்த்தப்படுகிறது .புரிகிறதா அதாவது தனியார் பேரூந்தை ஓட்டுவது எளிது .

    N.SUNDRAMURTHY said...

    arasu palligali tamil vazhi kalvikke sariyana vasathigl ellai(niyamanamum serthuthan).aangila vazhi kalvi??????????????????????????