நகராட்சி நிர்வாகத்தில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர் வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் நகராட்சி சார்பில், இரண்டு துவக்கப் பள்ளி, நான்கு நடுநிலை, ஒரு உயர்நிலை, ஒரு மேல்நிலை என, மொத்தம், எட்டு பள்ளிகள் செயல்படுகின்றன.
இப்பள்ளிகளில், 1,479 பேர் படிக்கின்றனர். இதில், ராஜாஜி சாலையில் உள்ள, மேல்நிலைப் பள்ளியைத் தவிர, மற்ற பள்ளிகளில் நகராட்சி சார்பில், குழாய் மற்றும் ஆழ்துளை குழாய் மூலம், குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மேற்கண்ட ஏழு பள்ளிகளில், சுத்திகரிக்கப்பட்ட, குடிநீர் வழங்க, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
இதுகுறித்து, நகராட்சி ஆணையர் அச்சையா கூறுகையில், "ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி மூலம், குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி வைக்க, கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இன்னும், ஆறு மாத காலத்திற்குள், பணி நிறைவடையும்" என்றார்.
No comments:
Post a Comment