பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மேல் படிப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை 13ம் தேதி சிதம்பரம் மற்றும் விருத்தாசலத்தில் நடக்கிறது.
இதுகுறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் கடந்தண்டைவிட 11.3 சதவீதம் அதிகரிக்க பாடுபட்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோன்று வரும் கல்வியாண்டில் நமது இலக்கு 95 சதவீதமாக இருக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் படிப்பில் சேர்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கடலூர் மாவட்டத்தில் வரும் 13ம் தேதி காலை 9:30 மணிக்கு, சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பகல் 2:00 மணிக்கு விருத்தாசலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. நிகழ்ச்சியில் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்கள் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர். இதில் அந்தந்த பகுதி மாணவர்கள் பங்கேற்க தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment