Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 21, 2014

    ஹெச்.எம் சஸ்பெண்ட் விவகாரம்: போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்

    குமரி மாவட்டம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த இரணியல், பளுகல் அரசு மேல்நிலை பள்ளிகள், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாடவாரியாக குறைவான தேர்ச்சி விகிதத்தை பெற்று கொடுத்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் 12 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    மாவட்ட கலெக்டரால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ‘கமிஷன் ஒன்றை அமைத்து தமிழக கல்வித்துறை ஆய்வு செய்ய வேண்டும்.
    ஆசிரியர்களுக்கு எதிராக செயல்படுகின்ற மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என வலியுறுத்தி நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு தடை விதித்தால் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என்றும் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவே போலீசார் தடை விதித்தனர். இதனால், தடையை மீறி போராட்டம் நடத்தும் முடிவை ஆசிரியர்கள் கைவிட்டனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் இன்று மனு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

    2 comments:

    Anonymous said...

    teachers protest may win . Everyone should know that if there is toppers, there will be non-toppers, like that one or two schools may perform lesser than the district average because of various reasons, nowdays it is not possible to guide the students in a decent way because of morale degradation among students, no one is bothering about that, but everyone is talking about disciplined india, how it is possible to have a good citizen without having discipline? educationist should think of it

    Anonymous said...

    it is not possible that everyschool would top the list. there may be ups and downs due to various reasons including control of discipline.