எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்" என பெரம்பலூர் சி.இ.ஓ., மகாலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: "ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மே 1ம் தேதி பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் மே 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்காக,www.tndge.in என்ற இணையத்தில் குறிப்பிட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்திற்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவு செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக 125 ரூபாயும், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்குக் கட்டணமாக 50 ரூபாயும் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 40 ரூபாய்க்கான ஸ்டாம் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உறையை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சல் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விரிவான தகவல்களைwww.tndge.in என்ற இணையத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்காக விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பங்களை மே 15ம் தேதி மாலை 5 மணி வரை பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஒருங்கிணைப்பு மையமான ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
1 comment:
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பொழுது 40 ரூபாய் அஞ்சல் தலை ஒட்டிய உறையை இணைப்பது எப்படி ?
Post a Comment