Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 5, 2014

    570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


    570 பொறியியல் கல்லூரிகள்
    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக துறைசார்ந்த பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் என மொத்தம் 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

    கலந்தாய்வுக்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்நாள் அன்றே சுமார் 68 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்தன.

    வருகிற 20-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூன் 3-வது வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

    இதற்கிடையே, கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் வசதிக்காக 570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை மாவட்ட வாரியாக அண்ணா பல்கலைக்கழகம் தனது இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.

    இதில், கல்லூரி அமைந் துள்ள இடம், அங்கு செல்வதற் கான போக்குவரத்து வசதி, வழங் கப்படும் படிப்புகள், மொத்த இடங்கள், விடுதி வசதி, உணவு கட்டணம், கல்விக் கட்டணம், சிறுபான்மை கல்லூரி யாக இருந் தால் அதுபற்றிய விவரம் என கல்லூரி தொடர்பான அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

    No comments: