அரசு கலைக் கல்லூரியில் வரும் 30ம் தேதி நடக்கும் உடனடித் தேர்வுக்கு மொத்தம் 154 பேர் விண்ணப்பித்துள்ளனர்; மறு மதிப்பீட்டுக்கு 73 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு கலைக் கல்லூரி தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. மறு மதிப்பீடு செய்யும் இளங்கலை மாணவர்கள் விடைத்தாள் ஒன்றுக்கு 300 ரூபாய் மற்றும் விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும், முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் விடைத்தாளுக்கு 500 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் செலுத்தினர்.
அதேபோல், எம்.சி.ஏ., பாடத்திலுள்ள விடைத்தாள் ஒன்றுக்கு 600 ரூபாயும், விண்ணப்ப படிவத்துக்கு 50 ரூபாயும் கல்லூரி வளாகத்திலுள்ள யூகோ வங்கியில் செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று நேற்று மாலை வரை மொத்தம் 73 பேர் விண்ணப்பித்தனர்.
அதேபோல், உடனடி தேர்வுக்கு இளங்கலை மாணவர்கள் 575 ரூபாயும், முதுகலை மாணவர்கள் 675 ரூபாயும் யூகோ வங்கியில் செலுத்தி, தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் உரிய விண்ணப்பம் பெற்று, நேற்று மாலை வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
நேற்று மாலை மொத்தம் 154 மாணவர்கள் உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்தனர். உடனடி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மே 29ல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். மே 30 காலை 10.00 மணிக்கு உடனடி தேர்வு நடக்கிறது.
No comments:
Post a Comment