இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பான பி.எட்., மற்றும் முதுநிலை படிப்பான எம்.எட். ஆகிய படிப்புகளின் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
சென்னையில் திங்கள்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளி ஆசிரியர் ஆக வேண்டுமானால், ஓராண்டு படித்தால் போதும் என்ற நிலை உள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும், சிறப்பாக பயிற்றுவிக்கவும் இந்த ஓராண்டு படிப்பு நிச்சயம் போதாது.
எனவே, பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்பு காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு என்.சி.டி.இ. சார்பில் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, வருகின்ற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டாண்டு பி.எட்., இரண்டாண்டு எம்.எட். படிப்புகளைக் தொடங்க கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்படும்
அதே நேரம், இந்த புதிய மாற்றத்தை பின்பற்ற மாநில கல்வி நிறுவங்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்கப்படும் என்றார் அவர்.
இதன்படி, ஓரிரு ஆண்டுகளில் பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment:
நான் B.Ed (2001) படிக்கும்போதே இருந்து சொல்லிக்கிட்டு இருக்காங்க . B.Ed M.Ed இப்போ காத்து வாங்குது அதுனால அட்மிசன் வழி தேடுறாங்க .B.Ed க்கு கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் குறைஊம் போதும் .இப்படி ந்யூஸ் வருது . இப்போ வர காரணம் என்ன ? அட்மிசனுக்கா ? பேபர்காரன் காலெஜ் வசிக்கிறதும், அரசியல்காரன் TV சேனல் வசிக்கிறதும் . பேஷன் ஆகிடுச்சு.....உங்களுக்கு எது பிடிக்குமோ அதை செய்யவும் அப்போது உங்களுக்கு சுமை சுமையாக தெரியாது .இன்று படித்தவன் எல்லோரும் படித்த அடிமைகள் .( ஸர்டிஃபிகேட் ஐ ஒரு நிரூபானத்தில் கொடுத்து அவன் ஞாயிறு என்றும் பாராமல் அவன் சம்பள பணத்தில் P.F க்கு நிரூபனம் செலுத்தும் பணத்தை உம் பிடிக்கின்றனர் யென் என கேட்க யாரும் இல்லை ).படித்தவன் இன்று கல்வி அடிமைகள் ஆக மாற்றிவிட்டான் .
Post a Comment