இரட்டைப்பட்டம் பயின்று முடித்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹேட்டலில் வருகிற 18.4.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இது குறித்து வழக்கை எடுத்து நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் கூறியதாவது:
இரட்டைப்பட்டம் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தோல்வியடைந்த நிலையில் எங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசு மற்றும் யு.ஜி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது யு.ஜி.சி. 10+2+3+1என்ற அடிப்படையில் பயின்றால் அந்த டிகிரி செல்லுபடியாகும் என பதில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் வழக்கின் தன்மை குறித்தும் வழக்கில் விருப்பமுள்ளவர்களை புதிதாக இணைப்பதற்கும் ஆலோசணை கூட்டம் திருச்சியில் வருகிற ஞாயிற்று கிழமை நடைபெற உள்ளது. இவ்வழக்கில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் சுய விபர பட்டியலுடன், சான்றிதழ் நகல்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற வக்காலத்தில் கையொப்பம் இடுவதற்கு தயாராக அவர்கள் வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். கூட்டம் காலை 10.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெறும். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு 1.1.2012 முதல் முன்னுரிமையின் அடிப்படையில் தீர்ப்பு கிடைப்பது உறுதி என வழக்குரைஞர்கள் எங்களிடம் உறுதியளித்துள்ளனர். இது சம்பந்தமாக வழக்குரைஞர் சங்கரன் ஒரு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். மேலும் தகவல்களுக்கு கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
மேல் விபரங்களுக்கு கீழ் கண்ட தொடர்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்.
1.திரு. கலியமூர்த்தி - 9894718859 (விழுப்புரம்)
2.திரு.ஆரோக்கியராஜ் - 9942575162 (சிவகங்கை)
3.திரு.கணேஷ் - 9976105153 (சிவகங்கை)
4.திரு.கருணாலய பாண்டியன் - 9894192500 (திருவள்ளூர்)
5.திரு.இரவிச்சந்திரடுலு - 8608273362
6.திரு. விஸ்வநாத் - 9842942105
10 comments:
nanparkale nam asiriyarkal enpathy maranthu vidatirkal.neenkal unkal urimaikka poradunkal tavaru ellai aanal tavarana seitikalai veliedatirkal.9.5.14 andru supreme court sonnadu notice issue mattume.UGC 10+2+3+1 Sariyanatu endru vadam seiyavillai.UGC KURUM regulations padittu parunkal 10+2+3+1 enpadan vilakkam puriyum .so dont issue wrong news
ore nerathil dde la oru course regular la oru course pannuna selluma
All goes to trichy.collecting money.that's all.supreme court never allow one year.
sure,one yr degree padithavargal emarathirgal. ugc apadi sollavillai. so, money koduthu emaruvathai vida 3 yr padika muzharchi seiungal. .
3yr course mutithavarhal vaayaimoodikondu summa irungal. 1yr course mutithavarkal koottam potta ungalukku enna? .courttukkupona ungalukku enna? ungalalmutinthal tn govt kitta solli BT promotion podasoola thairiam irukka?
One year course eligible
One year course eligible
ஏமாற்றம் தான் மிஞ்சும்
Yaematram yarukkunu wait and see ma
Post a Comment