புதிய விதிப்படி, உயர் கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியை, மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவு தேர்வுப்படி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை, இத்தேர்வில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவரும் பங்கேற்கலாம் என்ற முறை இருந்தது.
இந்த ஆண்டு முதல், புதிய விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, பிளஸ் 2 பொதுத்தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே, ஜே.இ.இ., தேர்வில் பங்கேற்க முடியும். பட்டியலின தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், 65 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல, ஜே.இ.இ., தேர்வு முடிந்து, அதன் தரவரிசை பட்டியலில், ஏற்கனவே இருந்தது போல், பிளஸ் 2 மதிப்பெண்ணை, வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக சேர்க்கும் முறை ரத்து செய்யப்படுகிறது. அத்துடன், புதிய முறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான கமிட்டியையும், மத்திய அரசு அமைத்துள்ளது.
கமிட்டியில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, என்.ஐ.டி.,க்கள் மற்றும் ஐ.ஐ.டி.,க்களுக்கான இயக்குனர்கள், தேசிய தகவல் மைய உறுப்பினர், மத்திய இடை நிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., சார்பில் ஒருவர், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் வுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரி உள்ளிட்டோர் இடம் பெறுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment