Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 7, 2016

    அரசு வேலைக்கு ’குரூப் - 4’ தேர்வு எழுதியவர்கள் 12.60 லட்சம் பேர்!

    தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, 5,451 பணியிடங்களை நிரப்புவதற்கான, ’குரூப் - 4’ தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வில், 10ம் வகுப்பு முதல், இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை,12.60 லட்சம் பேர் பங்கேற்றனர்.தேர்வின் முடிவுகள், ஆறு மாதங்களில் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. 


    தமிழக அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வரி வசூலிப்பாளர், நில அளவையாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உட்பட, ஏழு விதமான பணியிடங்க ளில், 5,451 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, குரூப் - 4 எழுத்துத் தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., ஆக., 9ல் அறிவித்தது. 

    தேர்வில் பங்கேற்பதற்கான அடிப்படை கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டோர்,தேர்வுக்கு,செப்., 9க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட பிரச்னையால், ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்க முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானதும், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, செப்., 14 வரை நீட்டிக்கப்பட்டது. திட்டமிட்டபடி, நேற்று காலையில், எழுத்துத் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு முதல், பட்டப் படிப்பு, பிஎச்.டி., மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் வரை, மொத்தம், 15.64 லட்சம் பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர்; அவர்களில், 80.5 சதவீதமாக, 12.60 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    சென்னை உட்பட, 301தாலுகாக்களில், 5,296 தேர்வு அறைகளில் தேர்வு நடந்தது. முதன்மை கண்காணிப்பாளர்கள், தேர்வுக்கூட ஆய்வு அதிகாரிகள், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் என, மொத்தம், 88 ஆயிரத்து, 810 பேரும்; பறக்கும் படை அதிகாரிகள், 218 பேரும், தேர்வை நடத்தும் பணியில் ஈடுபட்டனர் 

    தேர்வுக்கு வந்தவர்களுக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், கைப்பை உள்ளிட் டவை, தேர்வறையில் அனுமதிக்கப் படவில்லை. 

    ’ரிசல்ட்’ எப்போது? 

    சென்னையில் தேர்வு நடைபெற்ற மையங் களை,டி.என்.பி.எஸ்.சி.,தலைவர் அருள்மொழி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகி யோர் பார்வையிட்டனர். பின், அருள்மொழி அளித்த பேட்டி: 

    டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஓராண்டில், 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வு களும் நடத்தப்பட்டு; 22 முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஜூன், 16 வரை நடந்த அனைத்து தேர்வுகளுக்கான முடிவுகளும்அறிவிக்கப்பட்டு விட்டன. மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவு, வரும் வாரத்தில் வெளியாகும். 

    சப் - கலெக்டர், டி.எஸ்.பி., உட்பட, உயர் பதவிகளில் காலியாக உள்ள, 85 பணி இடங்களை நிரப்புவதற்கான, ’குரூப் - 1’ தேர்வு, வரும், 9ல், அறிவிக்கப்படும். தேர்வாணையத் தின் திருத்தப்பட்ட அறிவுரைகள், இன்று வெளியிடப்படும். இந்த விதிகள், அடுத்து வரும் தேர்வுகள் அனைத்துக்கும் பொருந்தும். ’குரூப் - 4’ தேர்வு முடிவுகள், ஆறு மாதங்களுக்குள் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். 

    தேர்வில் புதுமண தம்பதி 

    தர்மபுரியைச் சேர்ந்த மணமக்கள் மணிமாறன் - சித்ரா ஆகியோர், நல்லம்பள்ளி அரசு பள்ளி மற்றும் தர்மபுரி குட்ஷெப்பர்டு மேல்நிலைப் பள்ளியில், மணக்கோலத்தில் தேர்வு எழுதினர். 

    மணமகன் மணிமாறன் கூறியதாவது

    பி.இ., படித்த எனக்கும், எம்.எஸ்சி., - பி.எட்., படித்த சித்ராவுக்கும், திருமணம் நிச்சயம் செய்யும் முன்னரே, இருவரும், ’குரூப் - 4’ தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தோம். தேர்வு நாளில், எங்கள் திருமணத்தை நடத்த, பெரியோர்கள் முடிவு செய்தனர். 

    அதனால், அதிகாலை, 5:00 மணிக்கு திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் தேர்வு மையத்தில், தேர்வில் பங்கேற்றோம்; தேர்ச்சி பெற்று, இருவரும் அரசு வேலையில் சேருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: