'கல்வி கட்டணம் செலுத்த, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வர வேண்டாம்' என, பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் அறிவுறுத்தியுள்ளன. பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில், மூன்றாம் கட்ட கல்வி கட்டணமும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், இரண்டாம் கட்ட கல்வி கட்டணமும், தற்போது பெறப்படுகிறது.
நவ., 1 முதல், கல்வி கட்டணம் வசூலிக்கும் பணி துவங்கியுள்ளது. பல பள்ளிகளில், 'இன்னும், ஐந்து நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவிப்பால், 500, 1,000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வரவேண்டாம் என்றும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணம் செலுத்த வேண்டுமென்றும், பெற்றோருக்கு, பள்ளி, கல்லுாரிகள் நெருக்கடி கொடுப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதனால், பெற்றோர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சில பள்ளி, கல்லுாரிகள், ஆன்லைனில், கட்டணம் வசூலிக்கின்றன. இதேபோல், அனைத்து பள்ளி, கல்லுாரிகளும், ஆன்லைன் முறையில் பணம் பெற்று கொள்ள வேண்டும். 'டெர்ம் பீஸ்' என்ற, பருவ கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்த, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment