எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.1 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.,க்களின் சம்பளம் தொடர்பாக பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு பல ஆய்வுக்கு பின்னர், எம்.பி.,க்களின் சம்பளம், படிகளை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இந்த குழு அறிக்கையை மத்திய அரசு ஆய்வு செய்த பின்னர் ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகம் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது எம்.பி.,க்களின் சம்பளத்தை ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற குழு அறிக்கையை ஏற்க பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. மேலும் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் படிகளையும் உயர்த்தவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஜனாதிபதியின் சம்பளத்தையும் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், கவர்னரின் சம்பளத்தை ரூ.1.10 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
No comments:
Post a Comment