தமிழ் வளர்ச்சி துறை சார்பாக, 4ம் தேதி நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பள்ளி மாணவ, மாணவியரிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும், கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், 4ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலிருந்தும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் மூன்று பேர் கலந்துகொள்ளலாம். மாணவ, மாணவியரை, பள்ளி தலைமையாசிரியரே தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.
கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து, வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment