மதுரையில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மூட்டா அமைப்பைச் சேர்ந்த மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர் இருளப்பன் அறையை முற்றுகையிட்டனர்.
பகுதி நேர பேராசிரியர்களுக்கு உரிய வகுப்புகளை வழங்குவது, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் கல்லுாரி முதல்வரை நீக்குதல், மாணவர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை முதல்வர் அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனால் அறையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தார். மாணவர்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதைதொடர்ந்து பேராசிரியர்கள், மாணவர்கள் 30 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். நேற்று வழக்கம் போல் கல்லுாரி இயங்கியது.
No comments:
Post a Comment