அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், ஊட்டி வட்டார வள மையம் சார்பில், தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மாணவர்களின் கையெழுத்து மற்றும் ஓவியத் திறமை யை மேம்படுத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது; மாவட்டத்தில் உள்ள, 14 மையங்களில் நடந்த பயிற்சியில், 95 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
புத்தகத்தில் உள்ள பாடங்களை, மாணவர்கள், ஆர்வத்துடன் புரிந்து படிக்க வகை செய்யும் வகையில், பொம்மலாட்டம் மற்றும் கதை கூறுதல் மூலம், கற்பிப்பது தொடர்பான பயிற்சி, மாவட்டத்தில் உள்ள, எட்டு மையங்களில் வழங்கப்பட்டது; 94 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஊட்டி சி.எஸ்.ஐ., சி.எம்.எம்., பள்ளியில், ’உள்ளூர் வளங்களை பயன்படுத்தி, அறிவியல் பாடங்களை கற்பித்தல்’ என்ற தலைப்பில் வழங்கப்பட்ட பயிற்சியில், 181 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளி மற்றும் தங்கள் பகுதி யை சுற்றி, எளிதாக கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி, அப்பொருட்களை கற்பித்தலுடன் இணைத்து, கல்வி போதிப்பது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது; அனைத்து தொடக்க கல்வி ஆசிரியர்களும் பங்கேற்றனர்.
பயிற்சிகளை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, உதவிதிட்ட ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி மேற்பார்வையில், ஆசிரியப் பயிற்றுனர்கள் வழங்கினர்.
No comments:
Post a Comment