Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
 • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
 • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

  Saturday, November 12, 2016

  கணக்குக்கு இனி இல்லை பிணக்கு!:அசத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள்

  கோவை:பூஜ்ஜியத்தை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்புண்டு என, உலகத்திற்கு உரக்க சொன்னவர்கள் தான் நம் முன்னோர்கள். ஆனால் இன்று, சிறுவண்டுகளுக்கு சின்ன வாய்ப்பாட்டில் கூட, எக்கச்சக்க திணறல். 3*2 என்றால் கூட, விரல் விட்டு எண்ணி, பதில் சொல்றாங்க.


  இப்படியிருக்கும் நிலையில், 'கணக்கு பார்முலா வர்றதுக்கு, ஸ்பெஷல் மில்க் ரிடிங்ஸ் எல்லாம் குடிக்க தேவையில்ல. எளிய முறையில், அடிப்படை தகவல்களை சொல்லி கொடுத்தாலே போதும். சதம் அடிப்பது எளிது' என, அசால்ட்டாய் சொல்கிறார், தீத்திப்பாளையம், அரசு உயர்
  நிலைப்பள்ளி கணித ஆசிரியர் ரகோத்தமன்.

  வகுப்பறைக்குள் நுழைந்ததும், தலையை குனிந்தபடி, ஏதோ போர்டுக்குள் மூழ்கியிருந்தனர் மாணவர்கள். கூட்டல், கழித்தலில், எவ்வளவு பெரிய எண்களை கூறினாலும், கண் இமைக்கும் நேரத்தில், கோரஷாக பதில் வந்தது. ஆச்சரியத்துடன் பார்த்த போது, கணித ஆசிரியர் 
  ரகோத்தம்மன் கூறியதாவது:

  தொடக்கப் பள்ளிகளில் இருந்தே, கணிதம் சார்ந்த புரிதல் ஏற்படுத்துவது அவசியம். ஏனெனில், கணிதம் இல்லாமல், அன்றாட பிழைப்பை நகர்த்துவது கடினம். படிக்காத பாட்டி கூட, கூட்டல், கழித்தல் தெரிந்து வைத்திருப்பார். ஏனெனில், கணிதம் வாழ்க்கை கல்விக்கு தொடர்புடையது.
  இதை எளிமையாக, மாணவர்களுக்கு புரியும் விதத்தில் சொல்லி கொடுக்க, 'பெக் மேட்' என்ற, செயல்வழி கணித போர்ட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

  இதைப் பயன்படுத்தி, ஒற்றை எண், இரட்டை எண் வேறுபாடு, பகு எண், பகா எண், காரணிகள், மீ.பொ.வ., - மீ.சி.ம., என, பல்வேறு அடிப்படை விசயங்களை அறியலாம். பத்து நாணயங்கள் கொடுத்து, வேறுபாடுகளை அறிய சொன்னால், எளிதில் விளங்கிவிடும். இதேபோல், கூட்டல், கழித்தலை போர்டிலே செய்யலாம்.

  வட்டம், சதுரம், செவ்வகம் என, வடிவங்கள், அதன் தன்மை, அளவுகளை சொல்லி கொடுக்க லாம். என்னதான் கரும்பலகையில் வரைந்து சொல்லி கொடுத்தாலும், ரப்பர் பேண்டு கொண்டு, மாணவர்களே போர்ட்டில், வடிவங்கள் உருவாக்கும் போது, நிறைய கற்றுக் கொள்வர்.

  நான்கு புறமும் சமமாக இருந்தால் சதுரம் என, நீளமாக நீட்டி முழக்கி, சொல்லி கொடுப்பதற்கு பதில், செய்ய பழக்கினால், மனதில் பதிந்துவிடும். இதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு வரை, 
  தேற்றங்கள், வரையறை என, கணிதம் சார்ந்த அனைத்து பார்முலாக்களுக்கும், கற்பித்தல் 
  கருவிகள் உள்ளன.

  மாவட்டத்திற்கு, 10 பள்ளிகள் வீதம், கணித கற்பித்தல் உபகரணங்களை, அனைவருக்கும் 
  இடைநிலை கல்வி திட்டம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இது, மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதால், மற்ற பள்ளிகளுக்கும் வளங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

  No comments: