‛தமிழகத்தில் இன்று இரவு வரை, 500 ரூபாய், 1,000 ரூபாய் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்' என, தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதும் மின் கட்டணம் செலுத்த, மின் வாரியம் காலஅவகாசம் வழங்கியது.
எனினும், 500 ரூபாய், 1,000 ரூபாய் மூலம் கட்டணம் செலுத்த முடியுமா என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டது. இது குறித்து மத்திய அரசு தெளிவுப்படுத்திய பிறகு, புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையங்கள் இன்று இரவு வரை செயல்படும். இன்று வரை, 500 ரூபாய், 1,000 ரூபாய் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment