மகாராஷ்ட்டிரா அரசு பள்ளி விடுதியில் 12மணவிகள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் 3 மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எஸ்.பி., சஞ்சய்பவிஸ்கர் கூறியதாவது:
புல்தானா மாவட்டம் காமகோன் தேசில் என்ற கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் விடுதி உள்ளது. இங்கு பணிபுரியும் துப்பரவு தொழிலாளி இட்டுசிங்பவார் என்பவர் ஒரு மாணவியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
இது தொடர்பாக கற்பழிப்பு மற்றும் காயப்படுத்துதல் பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் முறையான மனு கொடுத்தால் மேலும் விசாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மலை வாழ் மக்கள்:
இதற்கிடையில் இந்த பள்ளியில் 12 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 3 மாணவிகள் கர்ப்பம் தரித்துள்ளதாகவும், இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் மலை வாழ் மக்கள் ஆவர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் திகாம்பர் காரத், சேர்மன் கஜனன் கோகரா,மேலும் 5 ஆசிரியர்கள், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment